பக்கம்:நடமாடுங் கல்லூரி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

23 சாக்ரடீஸ் செய்த சேவை, புரிந்த தொண்டு, உல கிற்கு அளித்த நல்லுரைகள், நல்ல நல்ல கருத்துக்கள் அவருக்குபின், பெரிதும் மக்களிடையே பரவத்தான் செய்தன. நல்லறிவு பெற்று, நல்லறிவுக் கல்லூரியாக-நட மாடுங் கல்லூரியாக விளங்கிய சாக்ரடீஸின் கொள்கை யைப் பின்பற்றிப் பலர் சிந்தனைத் தெளிவும், ஆராய்ந் திடும் பண்பும் பெற்றவராய் அவரது தொண்டை- நல்லறிவுப்பணியைத் தொடர்ந்து நடத்தி வரத்தவர வில்லை. தத்துவஞானி அரிஸ்டாடல், அரசியல் அறிஞன் பிளேட்டோ, ரூஸோ- வால்டேர்-கலிலியோ, இயேசு, புத்தர், முகம்மது நபி, உலகப் பெரியார் காந்தி முதலிய பலர் பல காலங்களிலும் நல்லறிவுக் கல்லூரியின் மாண வர்களாகி - நாளடைவில் அதன் ஆசிரியர்களாகவும் பேராசியர்களாகவும் விளங்கி- நாட்டிலே உலகிலே மேலும் மேலும் நல்லறிவை-நல்லறிவுக் கருத்துக்களைப் பரப்பி-பலரைத் தமது வழி நடத்திப் பண்படுத்திச் சென்றதைக் கண்டோம் கேட்டோம் - பார்த்தோம் படித்தோம் - படிக்கிறோம் - படித்துக்கொண்டுதான் இருப்போம். - நல்லறிவுக் கல் லூ ரி-நடமாடுங் கல்லூரி-நல் லெண்ணம் கொண்ட நல்லறிவாளர் உள்ளளவும் நட மாடியே தீரும் என்பது உறுதி ! இந்த நடமாடுங் கல்லூரி-நல்லறிவுக் கல்லூரியின் மாணவர்களாக. போதகாசிரியர்களாக - நல்லறிவை பரப்பி-நாட்டினரின் நல்வாழ்வுக்கான தொண்டில் ஈடுபடும் பணியில் பங்கு கொண்டு இதையே வாழ்வின்