உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நடமாடுங் கல்லூரி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 நாக்குகளால் நக்கிநக்கி இரத்த பசியினால் பதைபதைத்து, அவதிப்பட்டு. 'உரிமைக்குப் போராடும் வீரன் யார்? விடுதலைக்காக அறப்போரில் பங்கு கொள்ளும் சூரன் யார் ? விடுதலைக்காக தாய்கத்தின் அடிமை விலங்குகளை தகர்த்தெரிவதற்காகத் துடிதுடிக்கும் தீரன் யார்? என்று கழுகுக் கண்களிலே கண்டு பிடிக்க ஆவலோடு எதிர்பார்க்கும் ஏகாதிபத்தியம்-மக்களிடம் தேன்மொழி பலபல சிந்தி, மக்களை மயக்கி, வாக்குரிமை பெற்ற பிறகு அடக்கு முறையை ஏழைகளின் மீது வீசி, அவர் களை வதைத்துக் குருதியைக் குடித்து சுவைத்து கோபுரம் ஏறின கோமான்களைப் பெற்றிருக்கும் ஏகாதிபத்தியம்- சமுதாயத்து ஏற்றத் தாழ்வுகளைக் களைந்தெரிந்து பொது வுடமை நாடாக்கத் துடிதுடிக்கும் முற்போக்காளரை சமூக எதிரி' என்ற பெயரில் சுட்டுச்சுட்டு துப்பாக்கி முனையைச் சூடாக்கிக்கொண்டு, சிங்காதானம் பெற்ற சீமான்களைக் கொண்டிருக்கும் ஏகாதிபத்தியம்-நாட் டிலே நஞ்சு விதைகளைத் தூவி, நாட்டின் மாணிக்கங் களை வஞ்சகத்தால் மாளவைத்துக் கொண்டிருக்கும் கூட் டத்தின் நாற்ற மெடுத்த வண்டவாளங்களை தெள்ளந் தெளிய நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்கும் எழுத்தாளர் களை சிறையிலிட்டு வாட்டியெடுத்துக்கொண்டு அரியணை அடைந்த அறிவாளிகளைக் கொண்டிருக்கும் ஏகாதிபத்தி யம்-தாயகத்திலே பிறந்தவர்களின் தாய்ப்பாலில் கலந் திருக்கும் தாய் மொழியைத் தந்திர வார்த்தைகளால் குழித்தோண்டி புதைக்க திட்டமிட்டு வேலை செய்து, புகைவண்டி நிலையங்களின் பலகைகளிலே திராவிட மொழியை-தமிழ் மொழியை-கடை மொழியாக எழுதி அதன் மானத்தை சீர் குலைத்துக் கொண்டிருக்கும் ஏகாதிபத்தியம்-அண்ணாவின் தலைமையில் நீ அறப்போ ரில் இறங்கும்போது உன் பொன்னுடலைத் தழுவும்- தயங்காதே ! உன் தங்கமான உடலை அணைக்கும்-அல றாதே!