உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நடமாடுங் கல்லூரி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்றியுரை 15-3-53 அன்று தோழர் ஆசைத்தம்பி, அவர்களைச் சென்னையில் சந்தித்தேன். அவரது சில பல கருத்துக் களை தொகுத்து நூல் வடிவில் வெளியிட விரும்பும் என் எண்ணத்தை தெரிவித்தேன். மறுநாள் மீண்டும் அவரைக் கண்டேன். களிப் புடன் சில பல கருத்துக்களைப் புத்தக வடிவில் வெளி யிட்டுக் கொள்ளும் உரிமையை எனக்கு அளித்தார். எழுத்து மூலம். அவர் எனக்களித்த உரிமைகளிலே ஒன்றுதான் இப்போது நாட்டிலே ஏட்டிலே நடமாடும் “நடமாடுங் கல்லூரி" ஆசைத்தம்பி அவர்களைப் பற்றிய அறிமுகம் ஏதும் தமிழகத்திற்கு குறிப்பாக திராவிடத்திற்கு தேவை யில்லை. திராவிடம் அவரையும் அவரது தொண்டையும் நன் கு அறிந்துள்ளது. அறிவுப் படையின் அஞ்சாத, ஆற் றல் மிக்க தளபதி அவர் என்பதை ! அன்புள்ளத்துடன், ஆசைத்தம்பி அவர்கள் அளித்த அன்பளிப்பை என்னால் என் றுமே மறக்க முடியாது. அவருக்கு என்றும் கட மைப் பட்டுள்ளேன். புத்தக வடிவில் இதனை வெளியிட்ட " முரசொலி" பதிப்பகத்தாருக்கும், நல்ல முறையில் வெளி வர உதவி புரிந்த தோழர் எம். சூரி; அவர்கட்கும் என் நன்றி ! 64 நடமாடுங் கல்லூரி " க்குள் நுழையுங்கள் ! அறி வுப்படை வரிசையிலே அணிவகுத்து நில்லுங்கள் ! 16-4-53 சென்னை வணக்கம் மு. நமச்சிவாயம்