உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நடமாடுங் கல்லூரி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 ததியினர், உன் குழந்தைகள் உரிமையுடன் வாழ,நீ பெற்றெடுத்த செல்வங்களை அண்ணாவின் அறப்போ ருக்கு அனுப்பு - அதில் நீயும் கலந்துக்கொள்ள தயா ராக இரு ! திராவிட பெண்மணியே! உன் நாட்டு விடுதலைப் போராட்டத்திலே நீயும் கலந்து கொள்ளவேண்டும் ! திராவிடக் கண்மணியே ! நீ செல்வமுடன் வாழ-சுரண்டப்படாமல் வாழ- விடுதலையுடன் வாழ-அண்ணா காட்டும் அறப்போரில்- திராவிட தளபதி உன்னை அழைக்கப்போகும் அறப் போரில் - கலந்துக்கொள் ! அகநானூற்றின் அடையா ளமே! புறநானூற்றின் சின்னமே ! உன்னையும், உன் செல்வங்களையும் நம்பிக் கொண்டிருக்கிறது திராவிடம் ! துரோக மிழைக்காதே அதற்கு! வஞ்சனை புரியாதே அதற்கு ! உன் பரம்பரையின் வீரத்தை, விடுதலை வேட் கையைக் காட்டு அண்ணா காட்டும் அறப்போரில் !