58 அறியாமை - சிந்தனைத் தெளிவு அற்ற அவல நிலை- சூழ்நிலை மனிதரை மனித வாழ்விலிருந்தே மிகத் தொலைவிற்கு மிருக வாழ்விற்கும் மிகமிகக் கேடான, கீழான வாழ்வு வாழ்ந்து-அதிலேயே திருப்தியும் கொண்டிடும் அளவிற்கு மனித அறிவை மங்கிடும்படி செய்திருக்கிறது. இந்த அறியாமை, மக்களிளினத்தை வழி வழித் தொடர்ந்து படர்ந்து, வேரூன்றிடும்படி ஆண்டவன், பக்தி-பாராயணம், அருட்கதைகள் - திருவிளையாடல் என்ற பக்திப் போதணைகளும், மதம்-ஜாதி முறை களும், தலைவிதி-மோட்சம் நரகம் போன்ற தத்துவங் களும் பெரிதும் மக்களின் உள்ளங்களிலே பலப்பல வித வழிகளிலே, உருவங்களிலே, உபதேசம், வழிபாடு, நன் னெறி, பாவம் - புண்ணியம், என்றும் பரப்பப்பட்டு வந் துள்ளது. கடவுள்-ஆண்டவன் பற்றிய மக்கள் கருத்து- திராவிட மக்களின் கருத்து என்ன ? ஜாதிமதம்- சாஸ்திரம் சம்பிரதாயம்-மக்களுக்கு-திராவிடருக்குப் போதிப்பதுதான் என்ன ? அறியாமை வளர்ந்து மக்களிடம் மேலும் வேரூன்றி டும் பணியைத்தானே இவைகள் செய்கின்றன? ‘கடவுள் விட்டவழி கொடுத்து வைத்தது அவ் வளவுதான்,' 'போன ஜன்மத்தின் செய்த பாவ புண்ணி யப்படி தானே நடக்கும்' என்றெண்ணி, மக்கள் தங்க ளது வளமற்ற வரன்ட வாழ்விற்கும் வறுமைக்கும் தமக்குத்தாமே ஆறுதலைப் பெறுதலும் கொண்டு தமது உழைப்பையும் ஊக்கத்தையும் உணர்வையும் பிறர் சுரண்டிச் சுகபோகிகளாக வாழ்வதைக்கண்டும் கவலைப் படாது கண் மூடி வாழ்வு வாழும் நிலைக்குத் தள்ளப் பட்டுக் கிடக்கின்றனர்!
பக்கம்:நடமாடுங் கல்லூரி.pdf/58
Appearance