69 மக்களிடையே, மனமாறுதல் சிந்திக்கும் அளவா வது ஏற்படும்படி செய்யவேண்டும். நடந்தா கண்மூடி, யார் ஆண்டாலென்ன, எது லென்ன ? ஏதோ நடக்கிறபடி எல்லாம் நடக்கிறது. "நாம் வந்தவழி, கொடுத்து வைத்தது அவ்வளவு தான்', என்ற போக்கிலே மக்கள் வாழ்கிறார்களே. அந்த மந்த புத்தியை மாற்றி, தெளிவை ஏற்படுத்தப் பாடுபடவேண்டும். புறவாழ்வு - மனிதரது வெளி வேடம் நடை உடைகள் மாறிப் பயனில்லை -பலனுமில்லை. - அகவாழ்வு- மனிதனது உள்ளம்-உணர்வு-எண் ணம் கருத்து- கவனிப்பு சிந்தனையும் விழிப்புற்று, மறு மலர்ச்சி யடைந்தாகவேண்டும். அப்போதுதான் மனிதரை மனிதர் சுரண்ட முடி யாது, சுரண்டும் எண்ணமோ, ஏற்பாடோ, தேவையோ தோன்ற முடியாது, இருக்கவும் முடியாது, நிலைத்திடச் சந்தர்ப்பமும் கிடையாது, கிடைக்காது. பொது உரிமை -பொது உடைமை என்று, ஏற் கனவே குறிப்பிட்ட இரு நல்ல, மனிதப் பண்பு படைத் தவராக நாம் வாழ வேண்டுமானால், நம்மை நாம் உணர்ந்து, நமது, இனம், மொழி, கலை, கலாச்சாரம், நாகரிகம் ஆகியவற்றைப் பாது காத்திட வேண்டுமானால் நாமெல்லாம் நம்மிடையே நல்லறிவுப் பிரச்சாரம் செய் தாக வேண்டும். நடமாடுங் கல்லூரியின்பணி-இயக்கப்பணி தொட ர்ந்து நடத்தப்பட வேண்டும்.
பக்கம்:நடமாடுங் கல்லூரி.pdf/69
Appearance