பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறைச்சாலைச் சித்தனைகள்

119


தொடைச்சிக்கிட்டே அவர் பேசி முடிச்சார். அப்போ எனக்கு எப்படி இருந்திருக்கும்... ?”

“கேட்க வேண்டுமா ? சர்க்கரைப் பந்தலில் தேன் மாரி பொழிந்ததுபோல் இருந்திருக்கும்!” .

“பெட்டிஷன் போட்டவர்களுக்கு ?...”

“எரிகிற தீயில் எண்ணெய் விட்டதுபோல் இருந்திருக்கும்!”

“அப்புறம் ‘தடை என்ன ஆச்சு?'ன்னு கேட்கிறீங்களா? நல்ல வேளையாக அது கோர்ட்டுக்கு மேலே கோர்ட்டுன்னு போய்க்கிட்டிருக்கல்லே; நானும் என் நாடகமும்தான் ஊருக்கு ஊர் போய்க் கிட்டிருந்தோம். அப்பத்தான் பாவேந்தர் பாரதிதாசன் சொன்னார்’ இவர் எங்கள் கழக நடிகர், இவருடைய நாடகம் எங்கள் கழக நாடகம்'னு....”

“பெரியார்.. ?”

“அவரும் ‘திராவிடர் கழக மாநாடு நூறு நடத்தறதும் ஒண்ணு, ராதா நாடகம் ஒண்னு நடத்தறதும் ஒண்ணு'ன்னு அண்ணா சொன்னதை அப்பத்தான் அப்படியே ஆமோதிச்சார். இதிலே எனக்கு ஒரு தனி சந்தோஷம் ஏன்னா, ராஜாஜியும் சரி, பெரியாரும் சரி-பிறத்தியாரை அவ்வளவு சுலபமாப் பாராட்டி ஒரு வார்த்தை சொல்லிவிட மாட்டாங்க. அதிலும் அவ்வளவு சிக்கனம் அவங்க ரெண்டு பேரும்!"