பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறைச்சாலைச் சித்தனைகள்

157


“காரணம், ‘தரித்திர புத்தி'க்குப் பதிலா அவருக்குக் ‘கொடுக்கிற புத்தி’ இருந்ததுதான். இதைக் கேள்விப்பட்டிருந்த நான் பெருமாள் முதலியார்கிட்டே சொன்னேன் -'ரொம்ப நாளா இந்த சினிமாக்காரன் சகவாசமே நமக்கு வேணாம்னு இருந்து விட்டவன் நான். இப்போ நீங்க கூப்பிடறீங்க; வரேன். ஆனா, எதிலுமே என் வழி தனி வழின்னு உங்களுக்குத் தெரியும்...”

“அதெல்லாம் தெரிஞ்சித்தான் வந்திருக்கேன்; உங்க வழி என்ன வழின்னு சொல்லுங்கன்னார் முதலியார். ‘சினிமாவுக்காக நாடகத்தை நான் விடமாட்டேன். வால்டாக்ஸ் தியேட்டரிலே அது தொடர்ந்து நடக்கும். பகல்லே நாடகம்; ராத்திரியிலே படப்பிடிப்பு. சம்மதமா? ன்னேன். அப்படியே செய்வோம்'ன்னார். அடுத்தாப்போல, ‘காமிராவின் இஷ்டத்துக்குத் திரும்பித் திரும்பி நான் நடிக்க மாட்டேன், என் இஷ்டத்துக்குத் தான் காமிரா திரும்பித் திரும்பி என்னைப் படம் எடுக்கணும். என்ன சொல்றீங்க ?ன்னேன். சரி'ன்னார். கடைசியாச் சம்பளம். கே.பி.எஸ்.ஸ் அக்கு வாசன் ஒரு லட்ச ரூபா கொடுத்திருக்கிறாராம். நீங்க இருபத்தையாயிரம் கூடச் சேர்த்து ஒண்ணேகால் லட்சமா கொடுக்கணும். கொடுக்க முடியுமா ?ன்னேன்; ‘கொடுக்கிறேன்'னார். அப்படியே கொடுக்கவும் கொடுத்தார்.”

“சினிமா உலகில் முதன் முதலாக ஒன்றே கால் லட்ச ரூபாய் வாங்கிய நட்சத்திரமும் நீங்களாய்த்தான் இருக்க வேண்டும், இல்லையா ?”

“வேறே யார் வாங்கினாங்க, எனக்கு முந்தி ? அதுக்காகத்தானே உங்ககிட்டே இதைச் சொல்றேன்!”

“பிறகு... ?”

“மாலை நாடகம் முடிஞ்சதும் வீட்டுக்கு வந்து கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்குவேன். அப்படி ரெஸ்ட் எடுத்துக்கிறப்போ சில சமயம் தன்னை மறந்து தூங்கிடறதும் உண்டு. அந்த மாதிரி சமயங்களிலே முதலியாரே போன்