பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறைச்சாலைச் சித்தனைகள்

173


இருந்தது. அதைத் தடுக்கமுடியாத தர்ம சங்கடம் அண்ணாவுக்கு. பார்த்தார் கருணாநிதி; தானே தன் சகாக்களான சி.பி.சிற்றரசு, ப.உ.ச., மதுரை முத்து இவங்களையெல்லாம் சேர்த்துக்கிட்டு நின்னு, அந்த மாநாட்டை நடக்க விடாம தடுத்துட்டார்.”

“ஒரு நாட்டின் தலைவருக்கு அப்படி ஓர் உறுதி இருக்க வேண்டுமென்று நீங்கள் அப்போதே நினைத்தீர்கள் போலிருக்கிறது ?”

“ஆமாம். நான் நினைச்சதிலே தப்பில்லேன்னு இப்போ அவர் நடத்தற ஆட்சியிலேருந்து தெரியுதா, இல்லையா ? அப்படிப்பட்டவரை நான் எப்படி எதிர்த்து நிற்பேன்? யார் என்ன வேனுமானாலும் நினைச்சிக்கட்டும்’னு சென்னைக்கு வந்துட்டேன்.”

“எம்.ஜி.ஆர். ரசிகர் மன்ற மாநாடு தடுத்து நிறுத்தப்பட்டதற்காக அண்ணா வருத்தப்படவில்லையா ?”

“அவர் ஏன் வருத்தப்படறார் ? அவருக்கு இருந்த வருத்தம் வேறே....”

“அது என்ன வருத்தம்?”

“அரசியல் உலகத்திலே நிமிர்ந்து நிற்கிறாப்போல கலை உலகத்திலே “நம்மவங்க நிமிர்ந்து நிற்க முடியலையேன்னு அவர் என்கிட்டே அடிக்கடி சொல்லி வருத்தப்படுவார்.”

“நம்மவங்க என்றால்"? “நண்பர் கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், நாராயணசாமி இவங்களையெல்லாம் அவர் அப்படிக் குறிப்பிடறது வழக்கம்.”

“அவர்கள் மேல் அத்தனை அன்பா அவருக்கு ?”

“இருக்காதா? மத்தவங்க கழகத்தை வைச்சி வளர்ந்தா, அவங்க தங்களை வைச்சிக் கழகத்தை வளர்த்தவங்களாச்சே?

“ஓகோ!"