பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிறைச்சாலைச் சிந்தனைகள்

31


பார்த்துட்டு, ‘மறுபடியும் ஆரம்பிச்சுட்டீங்களா ? சாம்பலை எங்கே தட்டறதுன்னு கூடத் தெரியாம விஸ்கி பாட்டில்லே தட்டிக்கிட்டிருக்கீங்களே, அதையே உங்க சட்டை வேட்டியில் தட்டிக்கிட்டிருந்தா என்ன ஆகியிருக்கும்?... வேண்டாங்க, இந்த விபரீதம் ‘உன் மேல் ஆணையா இனிமே நான் இந்த மதுவைத் தொடற தில்லே'ன்னு எனக்கு நீங்க வாக்குக் கொடுக்கணும். இல்லேன்னா, நீங்க என்ன சேஞ்சாலும் சரி, எந்த வகையிலும் நான் உங்களோடு இனிமே ஒத்துழைக்க மாட்டேன்னு மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தை அப்படியே ‘பாலோ பண்ண ஆரம்பிச்சிட்டா. அதுக்கு மேலே நான் என்ன செய்ய முடியும்?... வெள்ளைக்காரன் காந்திகிட்டே சரண்டர் ஆன மாதிரி நானும் கீதாகிட்ட சரண்டர் ஆயிட்டேன். அதுதான் சமயம்னு அவ மிச்சம் மீதியிருந்த விஸ்கியை எடுத்து ஆஷ்ட்ரேயில் கொட்டிக் கலந்து அங்கிருந்த வாஷ் பேஸின்'லே ஊத்திட்டா. அதோடு நானும் அதுக்குக் ‘குட்பை போட்டுட்டேன். அன்னியிலேருந்து வெறும் தண்ணியைத் தவிர வேறே தண்ணியை நான் கண்ணாலும் பார்க்கிறதில்லே.”

“அட, பாவமே எல்லாரும் மதுவுக்கு வெல்கம் கொடுத்துக்கிட்டிருக்கிறப்போ, நீங்க ‘சென்ட் ஆப் கொடுத்துட்டீங்களே ?”

“யார் ‘வெல்கம் கொடுக்கிறாங்க ? இதுவரையிலே திருட்டுத்தனமா குடிச்சிக்கிட்டிருந்தவங்க இனிமே பகிரங்கமா குடிக்கலாமேங்கிறதுக்காக வெல்கம் கொடுக்கிறாங்க. எனக்குத்தான் அந்தக் கவலையே இல்லையே, நான் அதுக்கு சந்தோஷமா ‘சென்ட் ஆப் கொடுத்துட்டேன்!”

“அப்புறம் உங்க கம்பெனியிலே இருந்த என்.எஸ்.கே.என்னதான் ஆனார் ?"