பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

விந்தன்


"எந்த வள்ளியம்மை பிறந்த தில்லையாடி... தென்னாப்பிரிக்காவிலே வெள்ளையரின் நிறத் திமிரை எதிர்த்துக் காந்திஜி சத்தியாக்கிரகம் செய்தபோது அவருக்குப் பக்க பலமாயிருந்து உயிர்த் தியாகம் செய்தார்களே, அந்த வள்ளியம்மை பிறந்த தில்லையா ?”

“ஆமாம், மாயவரத்துக்குப் பக்கத்திலேதானே அந்த ஊரு ? அதைப் பார்த்துட்டுப் போறதுக்காகக் காந்தி வந்திருந்தாரு...”

“அதற்கு ஏன் கலாட்டா செய்ய வேண்டும்?”

“தென்னாப்பிரிக்காவிலே நிறத் திமிர் இருந்தா, இங்கே ஜாதித் திமிர் இருக்குன்னு காட்டிக்க வேண்டாமா, அதுக்கு.”

“அது என்ன ஜாதித் திமிர் ?”

“வள்ளியம்மை ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்தவங்களாச்சே! அவங்கப் பிறந்த தில்லையாடியை பார்க்க வந்த காந்திக்குக் கொட்டாங்கச்சிச் செட்டியார் தங்க இடம் கொடுக்கலாமா ?... அதுக்காக மேல் ஜாதிக்காரங்க கலாட்டா சேஞ்சாங்க!”

“அப்புறம் ?”

“சாஸ்திரம்தான் யார் எப்படி வேணும்னாலும் வளைச்சிப் பேச இடம் கொடுக்குமே?.."தொட்டாதோஷம்"பான்; ‘குளிச்சிட்டா அது போக்சு'ம்பான் ....அதை வைச்சி, ‘அந்த அம்மா ஊருக்குப் போயிட்டு வந்து இங்கே தங்கினாத்தான் தோஷம், போறதுக்கு முந்தி தங்கினாத் தோஷமில்லே'ன்னு சொல்லி, அந்தக் கலாட்டாவைச் சமாளிச்சாங்க.”

“பாவம், கொட்டாங்கச்சிச் செட்டியார் படாத பாடு பட்டிருப்பார்.”

“அதைச் சொல்லணுமா ?....அன்னிக்குச் சாயந்திரம் மாயவரத்திலே ஒரு கூட்டம் நடந்தது...கூட்டம்னா அந்தக்