பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

விந்தன்


மாட்டோம்னு அவங்க முதலாளிகிட்டே சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க!”

“அந்த அளவுக்குப் போய்விட்டதா?...முதலாளி என்ன செய்தார் ?”

“அவர் முழிச்சார். எனக்காக மத்தவங்களை விடவும் அவர் தயாராயில்லே; மத்தவங்களுக்காக என்னை விடவும் அவர் தயாராயில்லே...” -

“கடைசியில் என்னதான் ஆயிற்று ?”

“எம்.எஸ்.முத்துகிருஷ்ணன்கிட்டே எங்களுக்கெல்லாம் அந்தக் காலத்திலேயே பெருமதிப்பு உண்டு. அவர் எல்லாரையும் கூப்பிட்டு விசாரிச்சு, ஒரு வழியா சமாதானம் சேஞ்சி வைச்சார்.”

“நல்ல வேளை, ‘ராதாகிருஷ்ணனான உங்களைப் போலவே அந்த ‘முத்துகிருஷ்ணனும் ‘தீராத விளையாட்டுப் பிள்ளையாயிருந்திருந்தால் இப்படி ஒரு சமாதானமே சாத்தியமாயிருந்திருக்காது, இல்லையா?”

“என்ன செய்வது ? நானாக யார் வம்புக்கும் போகமாட்டேன்; யாராவது வம்புக்கு வந்தாலும் விட மாட்டேன். இது என் சுபாவமாப் போச்சு!”

“பிறகு ?”.

“ஈரோட்டுக்குப் போனோம். அங்கே எங்க கம்பெனி நாடகங்க நடந்துகிட்டிருந்தப்போ, சக நடிகர்களிலே சில பேரு பச்சை அட்டை போட்ட ‘குடி அரசு’ பேப்பரை மறைச்சு வைச்சிகிட்டுப் படிக்கிறதைப் பார்த்தேன். ‘அது ஏன் ?’ ன்னு எனக்குப் புரியல்லே, நண்பர் பொன்னையாவைக் கேட்டேன். அது ராவணன் பத்திரிகை; அப்படித்தான் படிப்பாங்க. இல்லேன்னா, ஊர்ப் பெரியவங்க கட்டி வைச்சி உதைப்பாங்கன்னு சொன்னார். ராவணன் பத்திரிகை கூட நடத்துவானா ?ன்னேன். நடத்துவான், நடத்துவான். அந்த ராவணனை இன்னிக்கு நான் பார்க்கப் போறேன், நீயும்