பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9. மாரீசன் குரல்


“நான் தான் ‘ராவணனையும் பொன்னையாவையும் மாறி மாறிப் பார்த்துக்கிட்டிருந்தேனே தவிர, என்னை அந்த ராவணன் திரும்பிக்கூடப் பாக்கல்லே. ஒரு வேளை மாரீசன் குரலை எதிர்பார்த்து, அதிலேயே அவர் கவனமாயிருந்துகிட்டிருக்காரோ என்னவோன்னு நான் மெல்ல பொன்னையாவை நெருங்கி, ‘இங்கே பஞ்சவடி எங்கே இருக்கு ? ன்னு அவர் காதோடு காதாக் கேட்டேன். அவர் ஒரு நிமிஷம் முழிச்சிட்டு மறு நிமிஷம் தன்னைச் சமாளிச்சிக்கிட்டு, ‘பக்கத்திலேதான் இருக்கு'ன்னார். அங்கே இருந்து மாரீசன் குரல் கொடுத்தா இங்கே கேட்குமா ?ன்னேன். ‘கேட்கும், கேட்கும்'னார். அந்தச் சமயத்திலே, ‘லட்சுமணா, லட்சுமணா'ன்னு ஒரு குரல் கேட்டது. அவ்வளவுதான், கமண்டலத்தைக் கையிலே தூக்கிக்கிட்டு ‘பிச்சை, தாயே"ன்னு ராவணன் சீதையைச் சிறையெடுக்கப் பஞ்சவடிக்குக் கிளம்பிடுவார்ன்னு நான் நெனைச்சேன். நெனைச்சபடி நடக்கல்லே. அவர் ஆடாம அசையாம உட்கார்ந்துகிட்டிருந்த இடத்திலேயே உட்கார்ந்துகிட்டிருந்தார். அப்போ, ‘லட்சுமணா, லட்சுமணா'ன்னு மறுபடியும் குரல் கொடுத்துக்கிட்டே ராவணன் வீட்டிலிருந்து யாரோ ஒரு அம்மா வெளியே வந்தாங்க. அவங்களைப் பார்த்ததும், ‘இவங்கதான் மண்டோதரியா?ன்னு நான் பொன்னையாவைக் கேட்டேன். அவர் சிரிச்சார். ‘என்ன சிரிக்கிறீங்க ?ன்னேன், ‘நீ என்னடா, ஒரேயடியா ராமாயண காலத்துக்கே போயிட்டே ? இது ராவணன் காலம். ஆனா அந்த ராவணன் இல்லே இந்த