பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறைச்சாலைச் சிந்தனைகள்

79


நாராயணன் சி.வி. ராமன் தம்பி நாராயணன். அப்போ ஸ்டுடியோன்னா மேலே ஆஸ்பெஸ்டாஸ் கூரை, அதுக்குக் கீழே லைட் கிய்ட் ஒண்ணும் இருக்காது. இப்போ அவுட்டோர் ஷல்ட்டிங்கைச் சூரிய வெளிச்சத்திலே வைச்சி நடத்தறாப் போல அப்போ இண்டோர் ஷாலிட்டிங்கையும் சூரிய வெளிச்சத்தை வைச்சிதான் நடத்துவாங்க. அதுக்காக ஸ்டுடியோ கூரையைக் கண்ணாடிக் கூரையாப் போட்டிருப்பாங்க. ரிகார்டிங்குக்குப் ‘பிடில்-டோன்ட்ரக்'குன்னு ஒண்ணு இருக்கும். அந்த ட்ரக்கிட்டே ‘கண்ணே ‘ன்னு காதல் வசனம் பேசறதா இருந்தாக்கூடக் கத்தித்தான் பேசணும். ‘கீழ்ப்பாக்கம் வேறே பக்கத்திலே இருக்கா ? விஷயம் தெரியாத ஹீரோயினுங்க என்னவோ ஏதோன்னு நினைச்சிப் பயந்து ஓடுவாங்க. அவங்களை இழுத்து வைச்சி விஷயத்தைச் சொல்லி, ரீடேக் எடுப்பாங்க.”

“டைரக்டருக்கு ரொம்பப் பொறுமை வேண்டியிருந் திருக்கும்!”

“பொறுமையாவது? எடுத்ததுக்கெல்லாம் அவருக்குக் கோபம் வந்துடும். காலை ஏழு, ஏழரை மணிக்கே மேக்கப் போட்டுக்கிட்டு நாங்க ஸ்டுடியோவுக்குப் போய் விடுவோம். அவர் புரசைவாக்கத்திலிருந்த ‘ரெக்ஸ்’ ஓட்டலுக்குப் போய் நல்லாத் தண்ணி போட்டுக்கிட்டுப் பதினோருமணிக்கு வருவார். அதுக்கு மேலே ஷூட்டிங் ஆரம்பமாகும். ஒரு நாள் ஜெயில் ஷாட் எடுக்கிறதாயிருந்தது. ஹீரோ சகாதேவன் ஜெயில்லே இருக்கார். அவர் அங்கே எப்படி இருக்கணும்னு டைரக்டர் சொல்லணும்; சொல்லல்லே. அவர் பாட்டுக்கு சிகரெட்டை ஊதித் தள்ளிக்கிட்டே இருந்தார். சகாதேவன் என்ன செய்யறதுன்னு தெரியாம முழிச்சிக்கிட்டே இருந்தார். ரெண்டு பேரையும் கொஞ்ச நேரம் மாறி மாறிப் பார்த்துக்கிட்டிருந்த நான், “அதோ இருக்கே, அந்தத் துணிலே தலையைச் சாய்ச்சி வைச்சி நில்லுங்கன்னேன். அவ்வளவு தான்; ‘நான் டைரக்டரா, நீ டைரக்டரா?’ ன்னு டைரக்டர் என் மேலே பாய ஆரம்பிச்சிட்டார்!"