உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நடு ஆப்பிரிக்கா.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 ஆப்பிரிக்கர் ஜாம்பியாவாழ் ஆப்பிரிக்கர் ஏராளமான மொழி களைப் பேசுகின்றனர். பொது மொழியாகப் போலீ சாரும் படையினரும் நியான்ஸா என்ற மொழியைப் பேசுகின்றனர். சில சுரங்கங்களில் சட்டம்போ என்ற மொழி, பொது மொழியாய் நிலவுகிறது. ஜாம்பியா வாழ்ப் பெண்கள் கறுப்புச் சிவப்பு ஆடைகளையே விரும்பி அணிகின்றனர். இங்குள்ள மக்களின் தலையாய தொழில் வேளாண் மையும் கால்நடை வளர்த்தலும் ஆவன. விர்ஜினியா, பர்லி, துருக்கி ஆகிய மூவகைப் புகையிலைகளைப் பயி ரிடுகின்றனர். சாப்பாட்டுக்குச் சோளத்தைப் பெரிய அளவில் பயிரிட்டுக் கொள்கிறார்கள். பருத்திச் சாகு படியின் அளவு ஆண்டுதோறும் கூடுதலாக வருகிறது. பால் கறக்கவும் மாட்டிறைச்சிக்குப் பயன்படவும் ஏற்ற மாடுகளை அவர்கள் வளர்க்கிறார்கள். ஏரிகளில் மீன் பிடிப்பது பெரிய அளவில் பரவி வருகிறது. இரயில்பாதைகள் போடுவதற்கு உதவும் மரக்கட்டைகள் ஜாம்பியாக் காடுகளில் வளரும் ஒரு செந்நிறமான மரத்திலிருந்து வெட்டப்படுகின்றன. இசையில் இவர்களுக்கு நிறைந்த ஆர்வம் உண்டு. மயானங்களில் பல மரங்களை வளர்க்கிறார்கள். பிணத் தைப் புதைக்கும்போது ஒருவகை நடனக் கச்சேரியை நடத்துவது மரபாக இருந்து வருகிறது. பல்சுவை ஜாம்பியாவில் இருப்பவை: எழுபது கோடி டன் செப்பு, தேவையைவிடக் கூடுதலான நீர்வளம், பரப் பளவாலும் உயரத்தாலும் உலகிற் சிறந்த அருவிகள்,