உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நடு ஆப்பிரிக்கா.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 அந்தப் பிரகடனத்தைப் பிரிட்டன் ஏற்கவில்லை. 'ஒரு ஆளுக்கு ஒரு வாக்கு' என்ற அடிப்படையில் ஒவ்வொரு ஆப்பிரிக்கருக்கும் ரொடீசிய ஆட்சியில் வாய்ப்பு வழங்கி மக்களாட்சி நிறுவுவதானால்தான், ரொடீசியாவின் சுதந்திரத்தைப் பிரிட்டன் ஏற்றுக் கொள்ளவேண்டு மென்று ஐ. நா. அவையின் பொது மன்றம் 1968 அக்டோபர் இறுதியில் முடிவு திருக்கிறது. செய் உலகத்தையே மிரட்ட இந்தச் சின்னஞ்சிறு நாட் டிற்கு எப்படித் துணிவு ஏற்பட்டது? அந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு 17 பேரையும் எடுத்துக் கொண்டால் 16 பேர் கறுப்பராகவும் ஒருவர் வெள்ளைக் காரராகவும் இருக்கிறார்கள். சொத்தும் கல்வியறிவும் உடைய ஆப்பிரிக்கருக்கு மட்டுமே வாக்குரிமை வழங்கப் பெற்றிருக்கிறது. தவிரவும், கடந்த 10 ஆண்டுகளில் வெள்ளையர் குடி யேற்றம் விரைந்து நடைபெற்றிருக்கிறது. இதனால் இப்போது வெள்ளையரின் விழுக்காடு கூடுதலாக உள்ளது. ரொடீசியா, ஆப்பிரிக்காவிலேயே அழகான நாடு களில் ஒன்றாகத் திகழ்கிறது. சாலிஸ்பரி, புலவாயே, திவேலோ, உம்டாலி என்னும் நகரங்களில் கட்டிடங்கள் விண்ணை நோக்கி உயர்ந்து கொண்டே போகின்றன. பல பொருள்களில் இந்த நாடு தன்னிறைவு கொண்டிருக்கிறது. புகையிலை உற்பத்தி இந்த நாட்டின் பெருஞ் செல்வமாகும். ரொடீசியத் தலைநகரான