உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நடு ஆப்பிரிக்கா.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 சொல்லுவது இக்கூற்றுக்கு ஆதாரமாக அவர்கள் என்ன என்பதைக் காண்போம். 'அமெரிக்காவைக் கொலம்பஸ் கண்டு பிடிக்கு முன்னரே நாங்கள் ஆப் பிரிக்காவுக்குப் போய்விட்டோம். அமெரிக்காவில் குடியேறியவரெல்லாம் அமெரிக்கராக இருக்கும் போது, நாங்களும் அவ்வாறே ஆப்பிரிக்கர் என உரிமை கேட்பதில் தவறில்லை' என்பது அவர்களின் விடாப்பிடியான வாதம்! தாங்கள் ஆப்பிரிக்கர்களுக்குச் சம உரிமைகள் வழங்கியிருப்பதாகவும் போர்த்துக்கீசியர் பெருமைப் பள்ளிகளில் கறுப்புக் பட்டுக் கொள்ளுகின்றனர். குழந்தைகளையும் சேர்த்துக் கொள்ளுகிறார்களாம். மெய்தான்,800 வெள்ளைக் குழந்தைகளுடன் 10 கறுப் புக் குழந்தைகளையும் சேர்த்துக் கொண்டுவிடுவர். அது ஊருக்கு ஒப்புக்குச் செய்வதேயன்றி, கொள்கை மாற் றம் அன்று. இரயில் பயணம் செய்ய ஆப்பிரிக்கர்க்கும் உரிமை கொடுத்திருக்கிறார்கள். ஆயினும் அங்கோலாவிலோ மொசாம்பிக்கேயிலோ ஆப்பிரிக்கரை இரயிலில் காணு வது அருமை. காரணம், ஆப்பிரிக்கரின் சம்பளம்- அதே வேலைக்கு - போர்த்துக்கீசியர் பெறும் சம்பளத் தில் நான்கில் ஒரு பங்கு. எனவே, இரயில் கட்டணம் செலுத்தும் அளவுக்கு ஆப்பிரிக்கரிடம் பணம் கிடை யாது. ஆப்பிரிக்கருக்கும் வாக்குரிமை வழங்கப் பெற் எல்லா ஆப்பிரிக்கருக்கும் அன்று. றிருக்கிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள். அவர்களுள்ளும் போர்த்துக்கீய மொழியைத்தெளி வாகவும் செம்மையாகவும் பேசத் தெரிந்தவர்கள்.