உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நடு ஆப்பிரிக்கா.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவகை நீதி 47 போர்த்துக்கீசிய நாட்டுச் சட்டப்படி போர்த்துக் கீசியர்கள் நடத்தப்படுகிறார்கள். ஆப்பிரிக்க மக்கள் சில சமயங்களில் நாட்டு வழக்கப்படியும் பிற சமயங் களில் போர்த்துக்கீசியச் சட்டப்படியும் ஆளப்படு கிறார்கள். 400 ஆண்டுகளாக இங்கு மக்களைப் பிடித்து அடிமை வியாபாரத்திற்கு பிரசில் நாட்டுக்கு அனுப்பு வதே போர்த்துக்கீசியரின் பெரிய தொழிலாக இருந்து வந்திருக்கிறது. போர்த்துக்கீசிய ஆப்பிரிக்கரைக் கட் டாயப்படுத்தி ஆண்டுக்கு ஆறு மாதம் வேலை வாங்கும் பழக்கத்தையும், அவர்களைப் பிரம்பால் அடிக்கும் முறையையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். கல்வி நிலையும் சுகாதார நிலையும் கேவலத்தினும் கேவல மாக இருந்து வந்திருக்கின்றன. போக்குவரத்து வசதி களிலும் முன்னேற்றம் கிடையாது. ஆகையால் அயல வர் ஆட்சி என்ற பொதுக்கருத்து ஆங்கிலேய ஆட்சி, பிரெஞ்சு ஆட்சிகளைப்பற்றி நிலவுவதற்கும் போர்த்துக் கீசிய ஆட்சி முறைக்கும் எந்த வகையிலும் ஒற்றுமை கிடையாது. போலீசு வேலைக்கும் வேளாண்மைத் தொழிலுக் கும் போர்ச்சுகல் நாட்டிலிருந்து கைதிகளும் குற்ற வாளிகளும் கீழ்த்தரமான மக்களும் வரவழைக்கப்பட் டனர். எழுத்தர், பணிப்பெண்கள், வாடகைக்கார் இயக்குபவர், தச்சர்- அனைவரும் போர்த்துக்கீசியரே. இதனால் மனம் நொந்த ஆப்பிரிக்கர் அங்கோலாவை விட்டு வெளியேறி ரொடீசியாவுக்கும் ஜாம்பியாவுக் கும் அகதிகளாகச் சென்றனர்.