உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நடு ஆப்பிரிக்கா.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 பிற பொருள்களுடன் சேர்ந்தும் செப்பு, பயன், படுகிறது. துத்தநாகத்தைச் சேர்த்தால் செப்பு, பித்தளை ஆகிவிடுகிறது. தகரத்தைச் சேர்த்தால் செப்பு, வெண்கலம் ஆகி விடுகிறது. செப்பும் நிக்கலும் சேர்ந்தால் ஜெர்மன் சில்வர் கிடைக்கிறது.

இயேசுநாதர் காலத்திலேயே செப்பு பயன்படுத்த பட்டதாக மேலை நாட்டவர் குறிப்புக்களிலிருந்து தெரிகிறது. ஆனால் அந்த நிகழ்ச்சிகளுக்கெல்லாம் முன்னரே, நீண்டநெடுங்காலமாகத் தமிழரும் இந்தியா வில் உள்ள ஏனைய மக்களும் செப்பைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். இது மோகஞ்ச தாரோவில் அகழ்ந்து எடுக்கப்பட்ட பொருள்களினின்று தெரிகிறது நெல்லை மாவட்டத்து ஆதிச்ச நல்லூரில் பொருள் ஆராய்ச்சியிலும் செப்பால் செய்யப்பட்ட சிறு கருவிகள் அகப்பட்டுள்ளன.

புதை உலகிலேயே செப்புப்படிவங்கள் நிறைந்திருக்கும் நடுகள் சிலி, ஜாம்பியா இரண்டுமே. இந்தச் சுரங் கங்கள் ஜாம்பியாவில் கண்டு பிடிக்கப்பட்டதே ஒரு கதை. 1902ஆம் ஆண்டில் கோலியர் என்ற ஒருவெள்ளைக் காரன் வேட்டையாடச் சென்றான். அவன் ஒரு மிருகத்தைச் சுட்டு விழ்த்திய இடம் செப்புப்படிவம்