பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420

வடு

வடு பெ. (n.) 1. புண் ஆறியபின் (அ) அடிப்பட்ட இடத்தில் நிலைத்து விடும் அடையானம், தழும்பு; 5car, cicatrice. 2. மாவடு; tender mangoes. வடுச்சொல் பெ. (n.) பழஞ்சொல், பழிமொழி; reproach.

வடுப்படுத்துதல் வி. (v.) வெட்டு, குத்து முதலியவற்றால் காயப்படுத்துகை; wounding.

வடுப்பிஞ்சு பெ. (n.) இளம்பிஞ்சு; tender, unriped fruit.

வடை பெ. (n.) கெட்டியாக அரைத்த உளுத்தம் பருப்பை (அ) கடலைப் பருப்பை வட்டமாகத் தட்டி எண்ணெயில் வேகவைத்து எடுக்கப் படும் தின்பண்டம்;

cutlet-

like snack mode oflentil or chick-pehpaste and fried

in oil.

வடைகறி பெ. (n.) ஊறவைத்து அரைத்த கடலைப் பருப்புடன் உசிலைச் சேர்த்துத் தாளித்து ஆவியில் வேக வைத்து அதைக் குழம்பாகச் செய்யும் ஒரு வகைத் தொடுகறி; akind of side dish for idli, etc, using chickpea paste as in the preparatin of vadai.

வடைகுத்தி பெ. (n.) வடைகள் தன்றாக வெந்ததும் ஒவ்வொன்றாகக் குத்தி எடுக்கப்பயன்படும் நீனமானகம்பி; pick to take out from the hot oil.

வடைமாலை பெ. (n.) வேண்டுதலின்

பொருட்டு வடைகளைக் கோத்து தெய்வங்கட்கு இடும் மாலை rd

of vadai offered in vow to deities.

வடைவாரி பெ. (n.) துனைகள் கொண் டதும் வாணலியிலிருந்து வடையை எடுப்பதற்குப் பயன்படுத்துவதுமான கரண்டி; perforated ladle to take out vadai, ect. from the hot oil. வண்டப்புரட்டன் பெ. (n.) ஏமாற்றுக் காரன்; cheat.

வண்டரிசி பெ. (n.) உளுத்த அரிசி, குருவண்டுக் குள்ளிருக்கும் அரிசி; pest eaten rice.

வண்டல் மண் பெ. (n.) ஆறு, வெள்ளம் முதலியவை அடித்துக் கொண்டு வந்து ஒதுக்கும் வளமான மண்; silt. வண்டலடித்தல் வி. (v.) வயலுக்கு உரமாக வண்டல் மண்ணைப் பரப்புதல்; to spread, alluvial deposit in fields, as

manure.

வண்டவாளம் பெ. (n.) பிறருக்குத் தெரியாத வகையில் ஒருவர் மறைக்க விரும்புவதாகக் கருதப்படும் தில்லு முல்லு, ஊழல், மோசமானதடத்தை முதலியன; unplcasant or discreditable facts which one is thought to be hiding. வண்டன் பெ. (n.) 1. குள்ளன்; short, dwarfish person. 2. Beirenfuscir; brave and resolute man.

வண்டி பெ. (n.) மாடு, குதிரை போன்ற விலங்குகளால் இழுத்துச் செல்லப் படும் ஊர்தி. 2. எந்திரத்தால் இயங்கும் சக்கரங்களையுடைய ஊர்தி;

vehicle, bullock-

cart or horse-drawn cart.

வண்டி ஓடுதல் வி. (v.) அன்றாட அடிப் படை ஏத்துகளுக்குக் குறைவில் லாமல் உடல்நலத்தோடு வாழ்க்கை தடத்தல்; carry on.

வண்டிக்காரன் பெ. (n.) 1.வண்டியோட்டு பவன்; cart driver. 2. ஓட்டுநர்; driver.3. வண்டிக்கு உரியவன்; owner of a cart or carriage.

வண்டிச்சத்தம் பெ. (n.) வண்டி வாடகை அல்லது கூலி; fare (for hired vehicles, esp. cart).

வண்டியேர்க்கால் பெ. (n.) வண்டியின் மத்தியில் மையக் கட்டையின் மேல் நுகத்தடியுடன் பொருத்தப்பட்ட தீண்ட வலுவான மரக்கட்டை; a long sturdy plank centrally fixed in the bullock easy longitudenally.

வண்டுகடி பெ. (n.) 1. வண்டு கொட் டுகை; sting of wasp or beetle. 2. தோல் மேலுண்டாகும் சொறி வகை; ring

wom.