பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

422

வதக்கிக்கட்டல்

வதக்கிக்கட்டல் பெ. (n.) மருத்திலையை நெருப்பில் காட்டி பிறகு புண் புரைக்குக் கட்டுகை; bandaging after applying scorched medicinal leaves to abscess, wounds etc.

வதக்குவதக்கெனல் பெ. (n.) மொரு மொருப்போடு இல்லாது ஈரப்பசை யோடியிருத்தற் குறிப்பு;

being under-

boiled or under-fried as greens. வதங்கல் பெ. (n.) 1. வாடியது; that which is withered or dried. 2, ஈரப்பசை நீங்காத உணவுப்பண்டம்;

under-


boiled or under-fried food stuff.

வதங்குதல் வி. (v.) செடி, கொடி (அ)

காய்கறி நீர்த்தன்மை குறைந்து துவளுதல், பசுமை இழத்தல்; lose freshness.

வதவதவென்று பெ. (n.) ஒன்றையடுத்து ஒன்றென அதிக அளவில் நிறைந்து

வழிகை; overflowing surplusing in brim

of a bowl or vessel or any container. வதவலரிசி பெ. (n.) அரைக்காய்ச்சலான புழுங்கல் அரிசி; rice husked from boiled paddy before it is fully dried. வதறுதல் வி. (v.) 1. வாயாடுதல்; to chatter, prate to be talkative. 2. மழலை மொழியாதல் ; to lisp, to babble. 3. திட்டுதல்; to abuse.

வதிதல் வி. (v.) 1. தங்குதல் ; to dwell, abide. 2. துயிலுதல்; to sleep. வம்படித்தல் வி. (v.) 1. வீண்சொல் பேசுதல் ; indulge in idle talk or unnessay talk. 2. பழித்துப்பேசுதல்; to talk disparagingly.

வம்பு பெ. (n.) தேவையில்லாத சிக்கல்,சண்டைக்குக் காரணமாகும் உறழ்வு (தகராறு); unnecessary trouble. வம்புச்சண்டை பெ. (n.) ஒருவரிடம் வலியச் சென்று போடும் சண்டை; wantonly quarrel.

வம்புத்தனம் பெ. (n.) 1. குறும்பு; mischief. 2. வீண் பேச்சு; gossip.

வம்புதும்பு Gu. (n.) வீண்வம்பு;

unnecessary interference.

வயக்குதல் வி. (v.) 1. திருத்துதல்; to improve. reclaim as land. 2. பழக்குதல்;

to tame break in.

வயல் பெ. (n.) பயிரிடப்படும் நிலம்; field. வயல்புல் பெ. (n.) நன்செய் பயிர்களி டையே முளைக்கும் களை;

the grass or weed grown between crops in wet-land. வயல்வெளி பெ. (n.) வயலும், வயல் சார்ந்த இடமும்; agricultural tract. வயிரம்பாய்தல் வி. (v.) வலிமை (அ) உரமிகுதல்; to get strength. வயிரவிழா பெ. (n.) அறுபதாமாண்டு நிறைவுக் கொண்டாட்டம்; diamond jubilee.

வயிற்றிரைச்சல் பெ. (n.) வயிற்றி லுண்டாகும் இரைச்சல் ; gargling or gurgling sound in the abdomen.

வயிற்றில் பாலைவார்த்தல் வி. (v.) மோசமாக ஏதாவது நடந்துவிடும் என்று ஒருவர் அஞ்சும் சூழலில் அவருக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும்படி செய்தல்; get unexpected relief. வயிற்றில் புளியைக் கரைத்தல் வி. (v.) ஒருவரின் மனத்தில் அச்சம் ஏற்படும் வகையில் ஒரு செய்தியைச் சொல் லுதல்; feel fear in the pit of one's stomach, make one fearful. வயிற்றிலடித்தல் வி. (v.) ஒருவரின் பிழைப்பைக் கெடுத்தல்; deprive of his or her means of livelihood.

வயிற்றுக்கட்டி பெ. (n.) 1.வயிற்றுப் புண்

கட்டி; abdominal abscess. 2. ஈரல் முதலியவற்றின் வீக்கம்; enlargement of the liver or the spleen. வயிற்றுக்கடுப்பு பெ. (n.) வலியோடுகூடிய வயிற்றுப் போக்கு; dysentery with pain colic.

வயிற்றுக்கலக்கல் பெ. (n.) வயிறு கலங்கி மலங்கழிகை; stiring sensation in the