பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரவழைத்தல்' வி. (v.) 1. ஒருவரை (அ) ஒன்றை ஓர் இடத்துக்கு வரச் செய்தல் (அ) வந்து சேரச் செய்தல்; send for invite, bring. 2. உண்மை, செய்தி முதலியவற்றை ஒருவரிடமிருந்து வெளிக்கொணர்தல்; elicit, extract. வரவு செலவு பெ. (n.) வருமானம் பெறுதலும், செலவு செய்தலும்; receipts and expenditure. வரவேற்பு பெ. (n.) எதிர் கொண்ட ழைக்கை; reception, welcome, receive in person.

வரவேற்பு அறை பெ. (n.) வீடு, அலுவலகம் முதலியவற்றில் நுழை வாயிலையடுத்து அமைந்திருக்கும் விருந்தினர் அறை; drawing room, lounge, reception room.

வரவேற்புமடல் பெ. (n.) விழாவுக்கு வரும் முகாமை விருந்தினரை வரவேற்கும் முறையில் புகழ்ந்துக் கூறும் வாச கங்கள் அடங்கிய தாள்; scripted address of welcome. வரவேற்புரை பெ. (n.) விழாவிற்கு வந்துள்ளவர்களை வரவேற்று நிகழ்த்தும் உரை; address of welcome. வரள்(ளு)தல் வி. (v.) 1. வற்றுதல் ; to dry up, to evaporate. 2. உடம்பு மெலிதல்;

to become lean or emaciated. வரன் பெ. (n.) திருமணம் செய்து கொள்வதற்காகப் பார்க்கும் ஆண் (அ) பெண்; prospective bridegroom. வரன்முறை பெ. (n.) ஒரு நிறுவனம், அலுவலகம் போன்றவற்றில் விரை வுத் தேவையை ஒட்டி அவ்வப்போது அமர்த்தப்பட்ட பணியாளரை முறைப் படி அமர்த்துதல்; regularization of employees.

வரன்முறைப்படுத்துதல் வி. (v.) உரிய நெறிமுறைகளின்படி உடன்பட்டு ஒப்பளித்தல்; regularize.

வரி பெ. (n.) I.கோடு, பட்டை; line, stripe. 2. ஒரு கோட்டில் அமைத் திருக்கும் சொல் தொகுப்பு; line (of any written teat). 3. குடிமக்களிடமிருந்து அரசு தண்டும் கட்டணம்; tax.

வருகைப்பதிவேடு

425

வரிசை பெ. (n.) ஒருவருக்குப் பின் ஒருவராக (அ) ஒன்றையடுத்து ஒன்றாக அமையும் ஒழுங்குமுறை; line, row.

வரிசைப்படுத்துதல் வி. (v.) எண்கள், ஆண்டுகள், செய்திகள் போன்ற வற்றை ஓர் ஒழுங்கில் (அ) வரிசையில் அமைத்தல்; list in a specified order. வரிசையறிதல் வி. (V.) ஒருவர்தம் தகுதி அறிந்து சிறப்பித்தல்; to assertain one's ability or speciality. வரிந்துகட்டுதல்' வி. (v.) சண்டை, போட்டி போன்றவற்றை எதிர்கொள் வதற்காக (அ) ஒரு செயலைச் செய்வதற்காக விரைவுத் தன்மை யோடு தயாராகுதல்; girding up one's loins.

வரிந்துகட்டுதல்' வி. (v.) I. இறுக்கிக் கட்டுதல்; to bind tightly. 2. விரைவுத் தன்மை காட்டுதல்; to girde up one's loins voluntarily.

வரிபோடுதல் வி. (v.) குடியிறை விதித்தல்; to impose or levy a tax. வரிவிளம்பரம் பெ. (n.) செய்தித்தாளில் வகைப்படுத்தப்பட்டு, வெளியாகும், இரண்டொரு வரிகளிலான சிறிய விளம்பரம்; brief classified adveretisement with a few lines.

வருகை பெ. (n.) I. ஒருவர் ஓரிடத்துக்கு (அ) நிகழ்ச்சிக்கு வருதல், வரவு ; arrival. 2. அறிவியல் கண்டு பிடிப்புகள், புதிய பொருள்கள் போன்றவை முதன் முதலில் அறிமுகம் ஆகும் நிலை; introduction. வருகைப்பதிவு பெ.(n.) மாணவர், ஊழியர் முதலானோர் தங்களின் வருகையைப் பதிவு செய்தல்; marking attendance by students, workers, etc.

வருகைப்பதிவேடு பெ. (n.) பணியாளர்;

மாணவர்களின் வருகையைப் பதிவு செய்வதற்காக உள்ள ஏடு; attendance register.