பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெறிச்சோடி வி.அ. (adj.) வெறிச்சென்று பார்க்க.

வெறித்தல் வி. (v.) I. ஓர் இடம் ஆட்கள் இல்லாமல் வெறிச்சோடியிருத்தல்; (of a place) be empty (without any sign of activities). தெருவே வெறித்துக் கிடந்தது'. 2. மழை பெய்து வானம் தெளிதல்; (of sky) be clear. 'மழை வெறித்துவிட்டது'. 3. மாடு முதலி யவை மிரளுதல்; be frightened. 4. எந்தவிதச் சிந்தனையும் இல்லாமல் ஒன்றை வெகுநேரம் பார்த்துக் கொண்டிருத்தல் பார்வை ஒன்றின் மீது நிலைத்தல்; stare blankly give a vacant stare. 'சாப்பிடாமல் சோற்றை வெறித்தபடி உட்கார்ந்திருந்தான்'. 5.மிரட்சி, ஆர்வம், சினம் போன்ற வற்றின் காரணமாக ஒருவரை வெகுநேரம் உற்றுப் பார்த்தல்; gaze. வெறுங்கையுடன் வி.எ. (adj.) எதையும் கொண்டு வராமல் அல்லது எதையும் கொண்டு செல்லாமல்;

empty-handed. வெறுப்பு பெ. (n.) 1. ஒன்றை அல்லது ஒருவரை வெறுக்கும் நிலை; dislike. 2. வெறுமை உணர்வு; பற்றின்மை (விரக்தி); feeling of emptiness (caused by frustration). வாழ்க்கையில் வெறுப்புத்தட்டக்கூடாது'.

வெறும் பெ.எ.(adj.) 1. உள்ளே எதுவும் இல்லாத; empty. 2. (உடல், உடலுறுப்புகள் குறித்து வருகையில்) எதுவும் இல்லாத; bare; naked. 3. வேறு எதுவும் இல்லாமல் குறிப்பிட்டது மட்டும் தான் என்பதைக் கூறப் பயன்படும் சொல்; mere; nothing but. 4. குறிப்பிடப்படுவதன் மேல் எதுவும் இல்லாத என்ற பொருளில் பயன் படுத்தப்படும் சொல்; bare; empty. 5. பிறவற்றின் உதவியின்றி குறிப்பிடப்படுவதன் மூலமாகவே' என்னும் பொருளில் பயன் படுத்தப்படும் சொல்; mere.

வெறும் வாயை மெல்லுதல் வி. (v.) வம்பு பேசுதல்; gossip. 'கூடி அமர்ந்து கொண்டு வெறும் வாயை மெல்லு

வேகம்'

453

வதே இவர்களுக்கு வேலையாகி விட்டது'.

வெறுமனே வி.எ. (adv.) 1. எதுவும் செய்யாமல்; சும்மா; without being occupied; idly. 2.இன்றியமை யாததுகூட இல்லாமல்; without anything to accompany; as it is. 3. உரிய முறையில் அல்லாமல்; without the usual accompanying action; for form's sake. 4. மிக இன்றியமையாதவற்றைச் செய்யாமல்; mere. அடிப்படை ஏந்துகளைச் செய்துதராமல் வெறுமனே மனப் பாடக் கல்வி முறையால் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட முடியுமா?".

வெறுமை பெ. (n.) I. எதுவும் இல்லாதது

போன்ற உணர்வு; எதிலும் பிடிப்பு இல்லாத உணர்வு; feeling of emptiness; vacuum. 'நண்பர்கள் சென்றதும் அவன் மனத்தில் வெறுமை கவிந்தது'. வேக்காடு பெ. (n.) புழுக்கம்; sultriness. இந்த வேக்காட்டில் எப்படித்தான் வேலை செய்வது?' வேகத்தடை பெ. (n.) (ஊர்திகளின் வேகத்தைக் குறைப்பதற்காகச் சாலையில்) குறுக்கே சற்று மேடாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் அமைப்பு; speed breaker. 'இந்தச் சாலையின் சந்திப்பில் வேகத்தடை வந்த பின் நேர்ச்சிகள் (விபத்துகள்) குறைந்து விட்டன்.

வே

வேகம்' பெ. (n.) (பொதுவாக இயக்கம் குறித்து வரும்போது) குறிப்பிட்ட நேரத்தில் இவ்வளவு தூரம் அல்லது இத்தனை முறை என்ற வகையில் கணக்கிடப்படும் அளவு; speed. சிறுத்தை மணிக்கு எழுபது கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடியது'. 2. உந்துதல்; எழுச்சியுற்ற நிலை; impulse, excitement. ‘புதிதாக ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற வேகம்