பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

456

வௌவால்

வேளை பெ. (n.) I. (குறிப்பிட்ட) நேரம்; சமயம்; time. குழந்தை பிறந்த வேளை வீட்டில் நற்செயல்கள் நடந்தன.2.ஒரு நாளில் காலை, மாலை, தண்பகல், இரவு என்று பிரிக்கப்பட்ட பொழுது; time(s). 'மாலை வேளைதான் சற்று ஓய்வாக இருக்கமுடியும்'.

வேற்றுமை உருபு பெ. (இலக்.) வேற்றுமைப் பொருளை உணர்த்து வதற்காகப் பெயருக்கு இறுதியில் சேர்க்கும் உருபு; case marker or suffix. வேற்றுமைத் தொகை பெ. (இலக்.) வேற்றுமைப் பொருள் அடிப் படையில் இரண்டு பெயர்ச்சொற் களால் அமைந்த கூட்டுச்சொல்; case compound in which the case marker is elliptical.

வைகறை பெ. (n.) விடியத் தொடங்குகிற நேரம்; விடியல்; dawn; daybreak. வைகறையில் எழுந்து குளித்து விடுவார்.

வைப்பாட்டி பெ. (த.வ.) ஆசைநாயகி;

concubine.

வைப்பு பெ.(த.வ.) வைப்பாட்டி காண்க.

வைப்புத்தொகை பெ. (n.) குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு

பெற்றுக் கொள்ளும் வகையில் வங்கி, நிதி நிறுவனம் போன்றவற்றில் ஒருவர் செலுத்திவைத்திருக்கும் தொகை; deposit (in a bank or paid to an agency, etc.); (in India) fixed deposit.

வைப்புநிதி பெ. (n.) (வங்கி, நிறுவனம் போன்றவை) வைத்திருக்கும் அல்லது (குறிப்பிட்ட காரணத்திற்காக} ஒதுக்கி யிருக்கும் தொகை; reserves (of money in a bank); allotted fund.

வேறுபடு வி. (v.) ஒன்று மற்றொன்றைப் வைரவிழா பெ. (n.) (ஒரு அமைப்பு)

போல் இல்லாமலிருத்தல்; மாறு படுதல்; differ. 'கடைக்குக் கடை விலை வேறுபடுகிறது. வேறுபாடு பெ. (n.) வேற்றுமை; மாறுபாடு; difference. 'சமயவேறு பாடுகளை மறந்து ஒரே நாட்டவர் என்ற முறையில் ஒன்றுபடுவோம்.

வை

வைக்கோல் பெ. (n.) நெல்மணிகள் நீக்கப்பட்டு உலர்த்திய நெற்பயிரின் காய்ந்த தாள்; straw of paddy.

அறுபது ஆண்டுகளை நிறைவு செய்ததற்காகக் கொண்டாடப்படும் விழா; diamond jubilee.

வௌ

வௌவால் பெ. (n.) பறவை போல் பறப்பதும் (இயல்பிலேயே தலை கீழாகத் தொங்குவதும்) இரவில் இரை தேடுவதுமான, பாலூட்டி வகையைச் சேர்ந்த சிறிய விலங்குவகை; bat. 'பாழடைந்த மண்டபத்தில் வௌவால்கள் தொங்கிக் கொண்டிருந்தன.