பக்கம்:நந்திவர்மன்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77

மைத் :- இதைக் கொண்டு வந்தது யார்?

வித்யா : ஒரு சாளுக்கியன், சாகக்கிடக்கிருன் கொல்லைப் புறந்தில் வஞ்சகப் பேயே! இந்தப் பச்சைத் துரோகத்திற்காகவா நீ என் வீட்டில் குடியேறினுய்?

மைத் - (சிரித்து) பைத்தியக்காரி என்னடி முழுகி விட்டது? தோட்டிக்கு கண் பிணத்தில் தாசிக்குக் கண் தனத்தில் தேடி வரும் வாழ்வைத் திதென எதுக் கிடும் பெண்ணுமுண்ட்ோ?

வித்யா - வாழ்வு! வஞ்சகத்தின் அணைப்பிலே வாழ்வா கிடைக்கும்? நரகம் கிடைக்குமென்று சொல் 1 நான் தாசியாக இருக்கலாம்; உன் போல் நன்றி மறக் கும் துரோகியல்ல !

மைத் :- (சிரித்து) கற்றுத்தந்த குருவையே மிஞ்சு கிருயே! பேதையே! எலியைக் கொல்வது பூனையின் துரொகமல்ல அதன் இயற்கை !

வித்யா ருத்ராட்சப் பூண்யே! உன் இயற்கை யறியாமல் இத்தனை நாள் ஏமாந்து விட்டேன் மாவேந் வந “.3 தர் நந்திவர்மன், இளைவர் சந்திரவர்மன் இருவரையும் வஞ்சகமாய் மாய்த்துவிட்டு, காஞ்சியிலே சாளுக்கிய ராஜ்யம் நிறுவந்த சதிகாரா ! உன் எண்ணம் ஈடேற நான் விடப் போவதில்லை.

மைத் - முடியாது, பெண்ணே முடியாது ஈசனே வந்தாலும் என்னைத் தடுக்க முடியாது ! காரியம் மிஞ்சி விட்டது. குருக்கோட்டைப் போர் முனையில் நந்திவர்மன் கொல்லப்பட்டிருப்பான். சந்திரவர்மன் இங்கு புதைக்கப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/79&oldid=672033" இலிருந்து மீள்விக்கப்பட்டது