பக்கம்:நனவோட்டங்கள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 ல் ரா. சீனிவாசன் அவரே சொன்னார். "நீங்கள் தான் இவற்றை எல்லாம் பொறுமையாகக் கேட்டீர்கள். வேறு யார் நான் சொல்வதைக் கேட்பார்கள். படங்கள் போட்டால் பார்ப்பார்கள். காசு கேட்டால் கொடுப்பார்கள்" என்றார். "அதுவும் அவசியம் தானே." "அவசியம் தான். அவர்களது ஆத்ம திருப்திக்கு. அதோடு நின்றுவிட்டால் போதுமா? "ஆத்ம திருப்தி" எங்கேயே கேட்டிருக்கிறேன். செயலற்ற நிலையை உணர்த்தும் சொல் என்பது தான் எனக்குப்பட்டது. ஒரு சிலர் எந்தத் கட்சியையும் சாராமல் தனித்து நின்று போட்டியிட்டுத் தோற்பது எனக்கு நினைவுக்கு வந்தது. அது அவர்கள் ஆத்ம திருப்திக்குச் செய்வது என்று நினைத்தேன். அதற்கு முன்னால் அல்லது பின்னால் தொடர்ந்து செயல்பட வேண்டும். அதுதான் அவர்கள் சமூக நிலையை அவர்கள் எட்டிப் பிடிக்கிறார்கள் என்பது பொருள். இந்த எண்ணம் அவர் சொன்ன 'ஆத்ம திருப்தி என்ற சொல்லில் தோன்றியது. என் மனம் மறுபடியும் புரட்சியை நோக்கி ஓடியது. அதுதான் அவள். அவளைச் சந்திப்பதில் என் உள்ளுக்குள் ஒரு அரிப்பு இருந்து கொண்டே வந்தது. எப்படி அங்கே போவது? "சரி! நான் வரட்டுமா?” என்று இழுத்துப் பறித்துப் பேசினேன். இவ்வளவு தூரம் வந்தபிறகு எங்கள் வீட்டுக்கு வராமல் போவது நல்லது அல்ல" என்றார். 'பழம் நழுவிப் பாலில் விழுந்தது' என்ற பழமொழி நினைவிற்கு வந்தது. எவ்வளவு சோம்பேறித்தனம். பழம் நழுவாமல் இருந்தால் தனியேதான் சாப்பிட்டால் என்ன?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/106&oldid=772798" இலிருந்து மீள்விக்கப்பட்டது