பக்கம்:நனவோட்டங்கள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 125 செய்து கொள்ள வேண்டும். என்னால் அவனை வெறுக்க முடியவில்லை; துறக்க முடியவில்லை" என்றாள். "வெறுப்பு முதற்படி துறவு இரண்டாவது நிலை" என்று சொல்வது போல இருந்தது. "யாரிடமாவது சொல்லித் திருத்தி இருக்கலாமே". "அது அவ்வளவு பயன்தராது. கள்ளோ காவியமோ படித்திருக்கிறீர்களா? கணவன் மனைவி தகராறில் மூன்றாவது ஆள் வரக் கூடாது என்பதைத்தான் அந்தக் கதை விளக்குகிறது' என்றாள். பலபேர் வாழ்க்கை முறிவுகளை அந்த நாவல் காத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவர் குடும்ப நாவல்களுள் அது தலை சிறந்ததாகப் போற்றப் படுகிறது என்பது அவள் பேச்சால் அறிய முடிந்தது. "நீ நாவல் படிப்பது உண்டா?" என்று கேட்டேன். "குடும்ப நாவல்கள் பிடிக்கும்” என்றாள். "இவ்வளவு நாவல் படித்தும் உன் வாழ்க்கையைத் திருத்திக் கொள்ள முடியவில்லை." "இதுவரை எந்த ஆசிரியனும் என் கதையைச் சித்திரித்துக் காட்ட வில்லை." இது புதிய செய்தியாகப்பட்டது. "அதனால் தான் உங்களை அவர்கள் பார்க்கச் சொன்னேன்' என்றாள். - "இந்தப் படத்தில் நீ அழகாக இருக்கிறாய்" என்றேன். அதை அவளைப் பாராட்டுவதற்கு ஒரு வாய்ப்பாகப் பயன் படுத்திக் கொண்டேன். அவள் சிரித்தாள். "படம் எடுப்பதே அழகாக இருப்ப தால்தான்” என்று ஒரு புதிய தத்துவத்தைச் சொன்னாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/127&oldid=772840" இலிருந்து மீள்விக்கப்பட்டது