பக்கம்:நனவோட்டங்கள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன. வோட்டங்கள் 159 எவ்வளவு அவசியம் என்பதை உணர முடிந்தது. மஞ்சள் கயிறாக இருந்தால் உடனே நான் மணமானவள் என்பதைக் கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் வெளியே காட்டிவிடும். அதே மஞ்சள் நிறமுள்ள பொன் சரடு அழகுக்கு அழகாகவும் தாலி தொங்குவதற்கு அழகிய ஊஞ்சலாகவும் அமைந்து அதில் தாலி ரொம்பவும் அடக்கமாகச் சொன்ன பேச்சைக் கேட்டுக்கொண்டு உள்ளே மறைந்து கிடந்தது. என் இதயத்துடிப்பின் நாதத்தையும் உள்ளக் கொதிப்பின் வேகத்தையும் மாறிமாறி அனுபவித்துக் கொண்டிருந்தது. கம்ப ராமாயணத்தில் ஒரு கவிதை, சீதையிடம் அநுமன் கணையாழியைக் கொண்டுவந்து தருகிறான். அதை அவள் தன் மார்பில் அனைத்துக்கொண்டு மகிழ்கிறாள். அந்த மகிழ்ச்சியில் அது குளிர்ச்சி பெற்றது. விரக தாபத்தால் அது வெம்மையுற்றது என்று வருணிக்கிறார். ஏன்? இதயத் துடிப்பின் கீதத்தையும் வாழ்க்கைக் கசப்பின் சோகத்தையும் மாறிமாறி அது உணர்ந்து கொண்டிருந்தது. டாக்டர்கள் கழுத்தில் ஒரு மாலை போலப் போட்டுக் கொள்கிறார்களே அதுதான் ஸ்டெத்தாஸ்கோப்பு'; அதை வைத்துத் தொட்டு இதயத்துடிப்பை அறிவார்கள். அதேபாலத்தான் அந்தத் தாலி என் இதயத்துடிப்பை அறிந்துகொண்டே இருந்தது. அவர் என்னைவிட்டுப் பிரிந்தார்; இல்லை என்னைப் பிரித்தார். ஆனால் அந்தத்தாலி மட்டும் என்னோடு ஒட்டி உறவு கொண்டது. அது என்னைவிட்டு நீங்கவில்லை. அந்தப் புனிதமான ஒளிப்பிழம்பை என் மார்பில் அனைத்துப் போன்றினேன். அது அவன் கட்டியது என்பதற்காக அல்ல; சமுதாயம் அதைக் கட்டும்பொழுது மங்கல முழவோடு சேர்ந்து அதை வாழ்த்தியதால்தான். வந்த தந்திகள்; அதுதான் வாழ்த்துச் செய்திகள் கணக் கற்றவை; அவசரச் செய்தியாக அவை வந்து சேர்ந்தன. அவற்றையெல்லாம் கூட அவ்வப்பொழுது பார்த்துப் பொழுது போக்கி இருக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/161&oldid=772878" இலிருந்து மீள்விக்கப்பட்டது