பக்கம்:நனவோட்டங்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 25 "தினந்தோறும் சாமி படத்தையே போடுகிறீர்களே ஏன் அரசியல் தலைவர்கள் படம்” "கலையில் அரசியல் கலக்கக்கூடாது' என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. "தலைவர்களின் படம்" "மறைந்த தலைவர்களைத்தான் போடுவேன்.” "இருப்பவர்கள்”. "அவர்களுக்கு நான் விளம்பரம் தரத் தேவை இல்லை." "நடிகர் படம்” "அவர்தான் அமைச்சராகி விட்டாரே' நான் பொதுவாக நடிகரென்று சொன்னேன், இந்த பதிலை எதிர்பார்க்கவில்லை. "அதனால் என்ன?” "தேவையில்லை. அதுதான் தினம் பத்திரிகையில் வருகிறதே.” கலையில் உண்மை மனிதர்களை இழுக்கக்கூடாது என்றார். மேலும் சொன்னார். வாழ்க்கையைத் தீட்டலாம் மனிதர்களை இழுக்கக் கூடாதென்றார். இது நாவலுக்கு விளக்கம் சொல்வது போல இருந்தது. "நீங்கள் கதை எழுதியிருக்கிறீர்களா?" "கதை உருவாக்கி இருக்கிறேன்" என்றார். அதற்கு அர்த்தம் தெரியவில்லை. "கதா பாத்திரம்" "அவள் ஒரு விதவை; அவளுக்கு இரண்டு குழந்தைகள். அவள் நடுத்தெருவில் விடப்பட்டாள்; திக்கற்றவர்களுக்குத் தெய்வம் துணை. அந்த நிலையில் ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/27&oldid=772923" இலிருந்து மீள்விக்கப்பட்டது