பக்கம்:நனவோட்டங்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 31 குருடர்களுக்குக் காதல் பிறக்குமா ? என்று கேட்கலாம் போல் தோன்றியது. ஆனால் கேட்கவில்லை. 'அதனால்தான் இருட்டில் காதல் சிறக்கிறது” என்றேன், அப்போது விளக்கை அனைத்துவிட்டார்கள். படம் ஒடிக் கொண்டிருந்தது. அவள் பக்கத்தில் நான் இருந்தேன், ஆனால் அவள் என் பக்கத்தில் இருக்கவில்லை. அவளுக்கு அந்த உணர்ச்சி இருந்ததாகத் தெரியவில்லை. "நான் அங்கு இருந்தேன். ஆனால் என் மனம் அங்கு இருக்கவில்லை. உஷாவை நாடியது. நான் விரும்பி அவள் பக்கத்தில் உட்காரவில்லை. எதிர்பாராத விதமாக அவள் அந்த இடம்தேடி உட்கார்ந்தாள். அவள் பக்கத்து இடம் அவன் கணவனுக்கு உரிய இடம். அந்த நினைவு மின்னல் போல் என்னுள் தோன்றி மறைந்தது. அதுக்கு நான் என்ன செய்ய முடியும், உஷா என்னைப் பற்றி நினைப்பாள். நான் ஒரு பெண்ணின் பக்கத்தில் உட்கார்ந்திருந்தேன் என்று சொல்லுவாள். 'காதலுக்குக் கண்ணில்லை என்ற தலைப்பை அவள் என்னிடம் சொல்லிக் காட்டுவாள். நெஞ்சுக்கு எரியும் சக்தி எப்படி உண்டாகும் என்பதைத் தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்புக் கிடைத்தது. நெஞ்சு 'திக்' 'திக்' என்று அடித்துக்கொண்டது. அதே சமயத்தில் அவளை விட்டு என்னால் விலகவும் முடியவில்லை. விரும்பியிருந்தால் வேறொரிடத்தில் போய் உட்கார்ந் திருக்கலாம். அது ஒரு பெண்ணை அவமானப்படுத்துவது போல் இருக்கும் என்றும் நினைக்கத் தொடங்கினேன். உஷாவைப்பற்றி நினைக்கும் போது அண்மையில் பார்த்த சில நேரங்களில் தான் கவனத்துக்கு வரும். அதே கங்காவைத்தான், அவள் நினைவுக்குக் கொண்டு வந்தாள். அவளைப் போலவே தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பாள். அவள் மற்ற பெண்களோடு கலகலப்பாகப் பழகவில்லை என்பது அவளை வேறுபடுத்திக் காட்டியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/33&oldid=772930" இலிருந்து மீள்விக்கப்பட்டது