பக்கம்:நனவோட்டங்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 51 புத்தகம் வீட்டைவிட்டு வெளியேகூடப் போவதில்லை. தான் எழுதுவது பேசுவது மற்றவர்கள் கேட்க வேண்டு மென்ற ஆவலே அவர்களை எழுதத் துரண்டுகிறது. சிலர் கவிதைகள் எழுதுகிறார்கள். எதற்காக எழுது கிறார்கள். ஏதாவது அவர் உலகத்துக்குச் சொல்லும் செய்தி இருக்கவேண்டுமே. ஒன்றும் இருக்காது. அதே போலக் கதை எழுதுபவரும் இருக்கிறார்கள். தனக்கு எழுதத் தெரியும் என்பதைக் காட்டுவதற்காக எழுதுகிறார்கள். அதில் கற்பனை இருக்காது. கருத்து இருக்காது வெறும் நிகழ்ச்சியின் கட்டுக் கோப்புத்தான் இருக்கும். அதைப் போன்ற நிலையில் பழைய படங்களையே இந்த ஒவியர் போட்டுக் கொண்டிருந்தார். பழைய கதைகள் தோன்றிய போது அவை கற்பனைக் கருவூலங்களாக விளங்கின. ஆனால் பழகிவிடும் பொழுது கற்பனை மெருகு குறைந்து விடுகிறது. அவை செய்திகளாக நின்றுவிடுகின்றன. அன்று அவர் அங்கு வராததால் அவரைப் பற்றிய சிந்தனைகளும் ஊகங்களும் தோன்றின. அவரைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்று எண்ணினேன். அந்த வாய்ப்பையாவது பயன்படுத்திக் கொண்டு அவளிடம் பேச்சுக் கொடுக்கலாம் என்றிருந்தேன். அதற்கும் அவள் இடம் கொடுப்பதாகத் தெரியவில்லை. - துணிந்து அவளிடம் சென்றேன். "பழம் விலை என்ன" என்று கேட்டேன். "பத்து ரூபாய்” என்றாள். அவள் என் பழைய செய்கையைக் குத்திக்காட்டுவது போன்று இருந்தது. "பத்து ரூபாய்க்கு எத்தனை?” என்று கேட்டேன். "பழம் பத்துக் காசு, நான் பத்து ரூபாய்” என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/53&oldid=772952" இலிருந்து மீள்விக்கப்பட்டது