பக்கம்:நனவோட்டங்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.54 ரா. சீனிவாசன் கேட்கிற கேள்வி என்ன? "நீ யாரையாவது காதலித்து இருக்கிறாயா?" அவள் ஆமாம் என்று சொல்லிவிட்டால் போச்சு; உடனே நீ அவன் பின்னாலே போ என்று பேசக் கூடிய நாட்டிலே விதவைக்கு ஒரு விவாகமா?" "அதெல்லாம் மாறிவிடும். புதிய கருத்துகள் மெல்ல மெல்லப் புகுவதால் எல்லாரும் மனம் திருந்துவார்கள்" என்று பொதுப்படையாகப் பேசினேன். அவள் துணிந்து கேட்டாள். "ஏன்யா, நீ ஒரு விதவையைத் தைரியமாக மணந்து கொள்வாயா?" என்னால் உடனே பதில் சொல்ல முடியவில்லை. நேருக்கு நேர் அந்தக் கேள்வியைச் சந்திப்பதற்குத் தைரியம் வரவில்லை. - 'விதவைக்காகவே விதவையை யாரும் தேட மாட்டார்கள்” என்று கொஞ்சம் தெளிவாகவே பதில் சொன்னேன். - 'Widownobar" என்ற விளம்பரங்கள் என் மனத்தில் பளிச்சிட்டன. "இவ்வளவும் உன் கிட்டே. ஏன் பேசறேன் தெரியுமா? நீங்கள் ஒவியருக்கு வேண்டியவர் என்பதால்தான். நான் போற்றும் மனித தெய்வத்தை நீங்கள் மதிக்கிறதனால் தான்" என்று என்னிடம் முடிவில் சொன்னாள். "இல்லா விட்டால் உன் முகத்தைப் பார்க்கக் கூட மாட்டேன். நீ தைரியம் இருந்தால் என்னைக் கல்யாணம் செய்து கொள்; இந்தக் காசு நீட்டுகிற பழக்கத்தை விட்டுவிடு" என்று வெடுக்கென்று சொல்லி முடித்தாள். நான் இந்த பதிலை எதிர்பார்க்கவில்லை. "யோசனை இருந்தது. இப்போது விட்டுவிட்டேன்" என்று பதில் சொல்லி முடித்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/56&oldid=772955" இலிருந்து மீள்விக்கப்பட்டது