பக்கம்:நனவோட்டங்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன வோட்டங்கள் 63 அந்தஸ்து கோருகிறார்கள்; அமெரிக்கர் சம அந்தஸ்து தருகிறார்கள். சம உரிமை தருகிறார்கள். ஆனால் சம உடைமை என்பது கிடையாது. இன்னும் சொல்லப் போனால் சம உடைமை என்பது ருஷியாவில் இல்லை. அனைத்தையும் பொது உடைமை என்று கூறுகிறார்கள். நம் நாட்டில் பொது உடைமையை நாம் விரும்பவில்லை. சம உடைமையைத்தான் விரும்புகிறோம் என்று விளக்கினார். இப்பொழுதுதான் எனக்கு சோஷலிசத்துக்கும் கம்யூனிசத்துக்கும் வித்தியாசம் தெரிந்தது. சம உடைமை வேறு பொது உடைமை வேறு என்பதை அவர் பேச்சிலிருந்து தெரிந்து கொண்டேன். - "நீங்கள் அரசியல் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறீர் களே' என்று பாராட்டினேன். - "அரசியல் இரண்டு வகைப்படும். ஒன்று யார் பதவிக்கு வரவேண்டும் என்பது. மற்றொன்று எது அரசியலில் இடம்பெற வேண்டும் என்பது. எல்லோரும் முன்னதில் கவனம் செலுத்துகிறார்கள். நான் பின்னதில் கவனம் செலுத்துகிறேன்" என்றார். "நீங்கள் அரசியலில் பங்கு கொண்டால் நன்றாக இருக்கும்." "இந்தத் திக்கற்றவர்களைக் காப்பதை என் கடமை யாகக் கொண்டிருக்கிறேன். அங்கே போனால் எதுவும் செய்ய முடியாது" என்று சொன்னார். "ஆட்களை மாற்றுவதை விட அமைப்புகலை மாற்ற வேண்டும்” என்று நான் ரொம்பவும் அரசியல் தெரிந்த வனைப்போலப் பேசினேன். "அப்படிப் பேசுவது வெறும் வாய் அரசியலாக முடிந்து விடும். அது எதிர்காலத்துக்கு என்று வைத்துக் கொள்ள வேண்டும். நிகழ்காலத்தில் பொல்லாதவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/65&oldid=772965" இலிருந்து மீள்விக்கப்பட்டது