பக்கம்:நனவோட்டங்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 ல் ரா. சீனிவாசன் இறங்குவது கஷ்டம். தண்ணிர் சில சமயம் மேலே வராவிட்டால் எடுத்துக் கொண்டு போக வேண்டியுள்ளது. என்னவோ இப்படி ஒரு சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. என்றாலும் காற்றோட்டமான வீடுகள் அவர்களை நோய்களினின்று காக்கின்றன. இது சமுதாயத்தில் செய்யப்பட்ட சிறந்த பொருளாதாரப் புரட்சி என்று எனக்குப் பட்டது. அங்கே தான் வாக்குரிமை மிகுதியாக இருக்கிறது. ஏழைகளைக் கவனிக்கா விட்டால் அவர்கள் இவர்களைக் கவனிக்க மாட்டார்கள். எந்த அரசாங்கமும் ஏழைகளைக் கவனிக்காமல் இருக்க முடியாது. அவர்கள் தான் இந்த நாட்டில் மிகுதி. முதலில் அவர்கள் தேவைகளைக் கவனித்தால்தான் அரசாங்கம் நிலைத்து இருக்கும். வாக்குரிமை ஏழைகளிடம் இருக்கும் வரை சமுதாயப் பொருளாதாரப் புரட்சி நடந்தே தான் தீரும். காலம் பிடிக்கலாம். ஆனால் ஒரு நாள் லட்சியத்தை அடைவது உறுதி. "பாவம்! அவள் கணவன் இறந்து விட்டானே! அதே நினைவில்” - "அவள் வேதனை அடைவாள் என்று நினைக்கிறீர் கள். இல்லை. அது மெல்ல மெல்ல மறைந்து விடுகிறது. வாழ்க்கை அதைவிட வன்மை வாய்ந்தது” என்றார். அவர் மன்றக் கட்டடத்தில் உட்கார்ந்து கொண் டிருந்தார். அது மிகவும் சுத்தமாக இருந்தது, பல கட்சிப் பத்திரிகைகளும் அங்கு வந்திருந்தன. "நாங்கள் எல்லாக் கட்சிக்கும் ஆதரவு தருகிறோம்" என்றார். "அது எப்படி முடியும் ”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நனவோட்டங்கள்.pdf/94&oldid=772997" இலிருந்து மீள்விக்கப்பட்டது