பக்கம்:நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

நபிகள் நாயகம்

"அல்லாஹ் காப்பாற்றப் போகிறார்" என்ற விடை வந்ததாக எண்ணினான். கை நழுவி, வாள் கீழே விழுந்து விட்டது. நாயகம் அவர்கள் அந்த வாளைக் கையில் எடுத்து கொண்டு, "இப்பொழுது உன்னை யார் காப்பாற்றப் போகிறார்கள்?" என்றார். அதற்கு அவன் "ஹஜ்ரத்! நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்" என்றான். அதற்கு நாயகம் அவர்கள், "அல்ல; உன்னையும் என்னையும் காப்பாற்றியவன் ஆண்டவனே!" எனக் கூறிச் சென்று விட்டார். இது அவர்களது தெய்வ பக்திக்கு மற்றொரு சான்று. தன்னைக் கொல்ல வந்த பசுவையும் கொல்லலாம் என்பது ஒரு நீதி. தன்னைக் கொல்ல வந்த மனிதனையும், கொல்லாமல் விட்டது நாயகம் அவர்களின் நீதி. என்னே, நாயகம் அவர்களின் நீதியும், தெய்வ பக்தியும்!


11. சிக்கனம்

கருமித்தனம் அல்ல

ஒரு சமயம் நாயகம் அவர்களிடம் ஒரு பெரியவர் வந்து, 'தங்கள் ஊரில் பள்ளிவாசல் இல்லை. அதைக் கட்டியாக வேண்டும். அதற்குப் பணம் தேவை, என்ன செய்யலாம்?' என்றார்கள். அதற்கு நாயகம் அவர்கள், பக்கத்து ஊரிலுள்ள ஒரு செல்வனின் பெயரைச் சொல்லி, "அவரிடம் சென்று கேளுங்கள். கொடுப்பார்" என்றார்கள். பெரியவர் உடனே அவ்வூருக்குச் சென்று அப்பணக்காரரைப் பார்க்கப் போனார். அப்பொழுது பணக்காரர் தம் வேலையாளைத் தூணிற் கட்டி வைத்துத் தம் கையை மடக்கி, அவன் முகத்தில் குத்திக் கொண்டிருந்தார். பெரியவர் பக்கத்திலுள்ளவர்களிடம்