பக்கம்:நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும், நற்றொண்டுகளையும் குறித்து அவர் கொடுத்த குரல் ஒலி, நாடு முழுதும் நன்கு பரவியது. இன்று அது நூல் வடிவில் வெளிவருகிறது, இது அருமையும் பெருமையும் வாய்ந்ததாகும்.

இந்நூலை நான் பார்வையிட்டு மகிழ்ந்தேன். கருத்துகள் சுவையும், நயமும் கலந்து மிளிர்கின்றன. செய்திகள் ஆதாரத்தோடு விளக்கம் பெற்றிருக்கின்றன. நாயகம் அவர்களைப் பற்றி நாவலர் விசுவநாதம் அவர்கள் எவ்வளவு ஆராய்ந்திருக்கிறார்கள் என்பதற்கு இந்நூலே ஒரு சான்று.

அண்ணல் நபி [ஸல்-அம்] பற்றி அறிந்து கொள்ள ஆசையுள்ளவர்களுக்கு இச்சிறிய நூல் போதுமானது என்று கூறும் அளவிற்கு எனக்குத் துணிவு ஏற்படுகிறது.

பொதுவாக தமிழக மக்களும், குறிப்பாக இஸ்லாமிய மக்களும் இந்நூலை ஆழ்ந்து படித்து எம்பெருமானார் கலைமறை முகம்மது [ஸல்-அம்] அவர்களின் வரலாற்றினையும், போதனைகளையும் நன்கறிந்து, தமது வாழ்க்கைக்குப் பயன்படுத்திப் பயனடைய வேண்டுமெனவும், இதன் ஆசிரியர் இது போன்று இன்னுஞ் சில நூல்களையும் எழுதி, நமக்கு உதவி ஊக்கமளிக்க வேண்டுமெனவும் எல்லாம் வல்ல ஆண்டவனாகிய அல்லாஹவை வணங்கி வேண்டிக் கொள்கிறேன்.

தங்களன்புள்ள
சையத் அப்துல் கனி
திருச்சிராப்பள்ளி
29-03-74