பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

131



விக்கிரக வழிபாட்டுக்காரர்களிடம் யூதர்கள் சென்று “உங்களுடைய மதமே இஸ்லாத்தைவிட மேலானது” என்று சொல்லுவார்கள்.

இஸ்லாம் உண்மையான மதம் அல்ல என்றும், அதைத் தழுவியவர்களுக்கு அம்மதத்தில் நிலையான பற்று இருக்காது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தோடும் யூதர்கள் இஸ்லாத்தில் சேர்ந்து, மறுபடியும் யூத மதத்தில் சேர்ந்து கொள்வார்கள்.

ஒளஸ், கஸ்ரஜ் என்னும் அன்ஸாரிகளின் ஒற்றுமையே இஸ்லாத்தின் வலிமைக்கு முக்கியக் காரணம் என்பதை அறிந்து, அவர்களுக்குள் பிரிவினையை உண்டாக்கி விட்டால், இஸ்லாம் நசுங்கிவிடும் என்று அவர்கள் கருதினார்கள்.

அரபி தேசத்தில் பகையை மூட்டி விடுவது மிகவும் எளிதானது.

ஒரு சமயம், மேற்படி இரு கூட்டத்தினரும், வேறு சிலருடன் கூடி ஓர் இடத்தில் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குள் பிரிவினையை உண்டாக்குவதற்காக, சில யூதர்கள் அங்கே சென்றார்கள். ஒளஸ், கஸ்ரஜ் கூட்டத்தினர் நலிவடைவதற்கு முக்கியக் காரணமாயிருந்த உஹதுப் போர் பற்றி யூதர்கள் மெதுவாகப் பேசத் தொடங்கினார்கள். அதனால் அக்கூட்டத்தினருக்குப் பழைய நிகழ்ச்சி நினைவுக்கு வந்து, அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி விட்டது. சண்டையே மூண்டு விடும் போல் இருந்தது. ஆனால், பெருமானார் அவர்களுக்கு இச்செய்தி தெரிந்து உடனே அங்கே சென்று அவர்களைச் சமாதானப்படுத்தி வைத்தார்கள்.


100. மதீனாவிலிருந்து யூதர்கள் ஓட்டம்

பத்ருப் போரில் முஸ்லிம்களுக்குக் கிடைத்த வெற்றியானது யூதர்களுக்கு அச்சத்தை விளைவித்தது.

இஸ்லாம் வலுவாக வேரூன்றி விடு முன், அதை நசுக்கி விட வேண்டும் என்ற கெட்ட எண்ணம் யூதர்களுக்கு ஏற்பட்டு விட்டது.

அதனால், முஸ்லிம்களுடன் ஏற்கனவே செய்து கொண்ட