பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184



“எனக்கு மேலே இருப்பவர்கள் என்னை வெளியேற்றி விடுவார்கள் என்ற அச்சமில்லாதிருப்பின், நானும் உங்களைப் பின்பற்றியிருப்பேன்” என்று அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அபிசீனியா நாட்டு அரசர் நஜ்ஜாஷிக்கு பெருமானார் அவர்கள் எழுதிய கடிதம் கிடைத்ததும். பெருமானார் அவர்களை ஆண்டவனின் உண்மையான திருத்தூதர் என ஏற்றுக் கொண்டு உடனே பதில் அனுப்பி வைத்தார்.

அரபி தேசத்துப் பிரபுகளுக்குப் பெருமானார் அவர்கள் அனுப்பிய கடிதங்களுக்கும் பதில் வந்தன.

ரோமாபுரிச் சக்கரவர்த்தியின் ஆட்சியின் கீழ், ஷாம் தேசத்தை நிர்வாகம் செலுத்தி வந்த ஹாரிஸ் கஸ்ஸானி என்பவருக்குப் பெருமானார் அவர்கள் அனுப்பிய கடிதத்தைக் கண்டு, அவர் மிகுந்த சினம் கொண்டு படைகளைத் தயார் செய்யும்படி உத்தரவிட்டார்.

முஸ்லிம்களை அவர் எந்த நேரத்திலும் தாக்கக் கூடும் என்று ஒவ்வொரு நிமிடமும் எதிர்பார்க்கப்பட்டது.

அவ்விரோதமே பின்னர் 'தபூக்' சண்டைக்குக் காரணமாக அமைந்தது.


138. பெருமானார் அவர்களின் முத்திரைக் கடிதம்

மிஸ்று ஆட்சித் தலைவருக்குப் பெருமானார் அவர்கள் எழுதிய கடிதத்தை அவர் பத்திரப்படுத்தி வைத்திருந்ததை இஸ்லாமிய வரலாறுகள் குறிப்பிடுகின்றன.

1853-ம் ஆண்டில் பிரெஞ்சு உல்லாசப் பயணிகள் சிலர், மிஸ்று (எகிப்து) தேசத்தில் சுற்றுலாச் சென்ற போது, ஒரு கிறிஸ்துவ