பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

211



இன்று முழங்கிய அந்தக் கறுப்பு பிலாலை (ரலி) முன்பு குறைஷிகள் என்ன பாடுபடுத்தினார்கள்!

இப்பொழுது அவர் கஃபாவின் மீது ஏறியதைக் கண்டதும், குறைஷிகளுக்கு உள்ளுற உண்டான வருத்தத்துக்கு அளவில்லை.


159. முன் அறிவிப்பும், திறவுகோலும்

பெருமானார் அவர்கள், கஃபாவின் பாதுகாவலரான உதுமான் இப்னு தல்ஹா என்பவரை அழைத்து வருமாறு கட்டளையிட்டார்கள்.

அவர் வந்ததும், அவரிடமிருந்த திறவு கோலைப் பெருமானார் அவர்கள் வாங்கி, கஃபாவைத் திறந்து, உள்ளே சென்று இரண்டு 'ரக்அத்' தொழுதார்கள், தொழுகை நிறைவேறியதும் வெளியே வந்து, கதவைப் பூட்டி, திறவு கோலை உதுமானிடம் கொடுத்து, “இது எப்போதும் உம்மிடமும், உம்முடைய சந்ததியாரிடமும் இருக்கும்” என்று கூறினார்கள்.

பெருமானார் அவர்களின் திருவாக்குப்படி, அந்தத் திறவு கோல் இன்று வரை அந்த வம்சத்தாரிடமே இருந்து வருகிறது.

பல ஆண்டுகளுக்கு முன், பெருமானார் அவர்கள் கூறிய முன் அறிவிப்பானது இப்பொழுது நிறைவேறியது.

இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில், பெருமானார் அவர்கள் கஃபாவுக்குள் செல்லும் போது எல்லாம், அவர்களைக் குறைஷிகள் துன்புறுத்திக் கொண்டிருப்பார்கள். -

ஒரு சமயம், பெருமானார் அவர்கள், உதுமான் இப்னு தல்ஹாவுடன் கஃபாவுக்குள் செல்லும் போது, குறைஷிகள் இடையூறு செய்தார்கள். அப்பொழுது பெருமானார் உதுமானிடம், "இந்தத் திறவுகோல் ஒரு நாள் என் கையில் இருக்கும். அப்போது அதை நான் யாரிடம் கொடுக்க விரும்புகிறேனோ, அவரிடம் கொடுப்பேன்” என்று கூறினார்கள்.

அதைக் கேட்டதும், உதுமான், “குறைஷிகள் அன்றைய தினத்திலிருந்து தாழ்வடைந்து நாசமாவார்கள்” என்று சொன்னார்.