பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

260


வர்களுக்கு நன்மையான முடிவு ஏற்படும்” என்ற கருத்துள்ள திருக்குர்ஆன் வாசகத்தை ஓதி முடித்து வீட்டுக்குச் சென்றார்கள்.

அதற்குப்பின் பெருமானார் அவர்கள் தொழுகைக்காகப் பள்ளிவாசலுக்குச் செல்லவில்லை.


202. அன்ஸாரிகளின் கவலை

பெருமானார் அவர்கள் நோயுற்றிருக்கும் போது, அவர்களுடைய கருணை மிக்க உள்ளத்தையும், அவர்களால் தாங்கள் பெற்ற பாக்கியங்களையும் நினைத்து, நினைத்து அன்ஸாரிகள் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார்கள்.

அபூபக்கர் அவர்களும், அப்பாஸ் அவர்களும் போய்க் கொண்டிருக்கையில், அன்ஸாரிகளின் வருத்ததைக் கண்டு "என்ன காரணம்?” என்று கேட்டார்கள்.

அதற்கு அவர்கள், “பெருமானார் அவர்களின் தோழமையோடு வாழ்ந்து வந்தது எங்களை நினைவு படுத்திக் கொண்டிருந்தது” என்று கூறினார்கள்.

பெருமானார் அவர்களும், “முஸ்லிம் மக்களே! அன்ஸாரிகளைப் பற்றி உங்களுக்கு நான் அறிவுரை கூறுகிறேன். சாதாரண முஸ்லிம்கள் பெருகிக் கொண்டிருப்பார்கள். ஆனால், உணவில் உப்பு எவ்வளவு குறைவாக இருக்குமோ, அப்படியே அன்ஸாரிகள் குறைவானவர்களாகவே இருப்பார்கள். அவர்கள் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றி விட்டார்கள். அவர்களுக்கு நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளைச் சரிவரச் செய்ய வேண்டும். அவர்கள் என்னுடைய வயிற்றுக்குச் சமானமானவர்கள். உங்களுடைய இலாப நஷ்டங்களுக்குப் பாதுகாவலாக இருப்பவர்கள். அன்ஸாரிகளில் நல்லவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். அவர்களிடம் ஏதாவது குற்றம் கண்டால், அதை மன்னித்து விடவேண்டும்" என்று கூறினார்கள்.