பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை சேது நாட்டின் மறைக்கப்பட்ட வரலாற்றினைக் கடந்த இருபது ஆண்டுகளாக ஆய்வு செய்து வரும் நூலாசிரியர் இப்பொழுது கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் சேது நாட்டிற்கு வருகை தந்த சுல்தான் செய்யது இபுராஹிம் அவர்கள், பவுத்திர மாணிக்கப் பட்டினத்தில் ஆட்சி செய்த பாண்டிய இளவலை வீழ்த்திவிட்டு இஸ்லாமிய ஷரிஅத் ஆட்சியை நிறுவிய விவரங்களையும் அன்னாரது தியாகத்தையும் வரலாற்று ஆதாரங்களுடன் இந்நூலில் தொகுத்துக் கொடுத்துள்ளார். ஆசிரியரது முந்தைய நூல்களைப் போன்று இந்த நூலும் வாசகர்களது ஆதரவைச் சிறப்பாகப் பெறும் என எண்ணுகிறோம். இந்த நூலின் மெய்ப்புகளைத் திருத்தி செப்பம் செய்து உதவிய தமிழ்ப்பேராசிரியர் திரு. மை. அப்துல் ஸ்லாம் அவர் களுக்கும், இந்த நூலின் அச்சுப்பணிகளை கண்காணித்து செவ்வனே முடித்த சென்னை 'முருகாலயம்" திரு. எம். முத்துச்சாமி அவர்களுக்கும். இந்த நூலில் இணைப்பதற்கான ஒளிப்படங் களை வழங்கிய இராமநாதபுரம் முதுநிலை செய்தியாளர் திரு. எம்.எஸ். அல்லாபக்ஸ் அவர்களுக்கும் எங்களது ஆழிய நன்றி. - சர்மிளா பதிப்பகத்தார் இராமநாதபுரம்.