பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1OO நபிகள் நாயகம் வழியில் நடைபெற்றதாக தமிழக வரலாற்று நூல்களில் காணப்படவில்லை. மேலும் பெளத்திர மாணிக்கப் பட்டிணத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக இஸ்லாமிய ஆட்சி நடைபெற்ற பொழுது ஏற்கனவே பெளத்திர மாணிக்கப் பட்டினம் போரில் கொலையுண்ட விக்கிரம பாண்டியனின் சகோதரன் திருப்பாண்டியன், வடக்கே திருப்பதியி லிருந்து ஒரு பெரும் படையைத் திரட்டி வந்து பெளத்திர மாணிக்கப் பட்டிணத்தில் சுல்த்தான் செய்யது இபுராகிம் அவர்களை ஹிஜ்ரி 594 துல்கயிதா பிறை 23 அன்று கொன்று ஆட்சியைக் கைப்பற்றியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் காலவரை ஆங்கில ஆண்டுக்கணக்கில் 26.9.1.198 ஆகும். இது தமிழக வரலாற்றின் நிகழ்ச்சிகளுக்குப் பொருந்துவதாக இல்லை. ஏனெனில் அப்பொழுது தமிழ் நாட்டின் தென் பகுதி முழு வதும் (பாண்டிய நாடு உள்பட) மூன்றாம் குலோத்துங்க சோழனது ஆட்சியில் அடங்கி இருந்தது. திருப்பாண்டியன் திருப்பதியிலிருந்து படை உதவி பெற்று வரவேண்டிய அவசியம் இல்லை. மேலும் திருப்பாண்டியன் என்ற பாண்டிய மன்னன், பாண்டியர் வரலாற்றில் காணப்படவில்லை என்பதை ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைக் கல்வெட்டுச் செய்திகள் தெளிவாக அறிவிக்கின்றன. சிதம்பரம் கோயில் கல்வெட்டு வாசகத்தின்படி மூன்றாம் குலோத்துங்க சோழன் மாறவர்மன் விக்கிரம பாண்டியனைக் கி.பி. 1186 - இல் மதுரை மன்னனாக்கினான் என்றும் அவனது மகன் சடையவர்மன் குலசேகர பாண்டியன் 5.6.1190 முதல் 1218 வரை மதுரை மன்னனாக இருந்து வந்தான் என்றும் குறிப்பிட்டுள்ளது". இதனால் சுல்தான் செய்யது இபுராகிம் அவர்கள் 11.1.1.188இல் விக்கிரம பாண்டியனைக் கொன்றார் என்றும் அந்த நூலில் குறிப்பிடப்பட்டிருப்பது தவறான செய்தியாகும். ஏனெனில் விக்கிரம பாண்டியன் கி.பி. 1190 வரை மதுரையை ஆட்சி செய்தான் 1) சிதம்பரம் கோயில் கல்வெட்டு (எஸ்.ஐ.ஐ. 3.86) 2) கோவிலூர் கல்வெட்டு ஏ.ஆர். 1830, 1908 சேரனுர்