பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


வழிபட்டதோ அவையெல்லாம் படைப்புக்களே தவிர இறை இல்லை என ஒதுக்கிக்கொண்டே வருகிறார்,

'நிஇதி’-'நீ இதுவல்ல என்று கூறும் சிறந்த தத்துவ நெறியில்.

விண்ணுமில்லை மண்ணுமில்லை மேலுமில்லை கீழுமில்லை பெண்ணுமில்லை ஆணுமில்லை பேடுமில்லை மூடுமில்லை தண்ணுமில்லை சூடுமில்லை ! வானுமில்லை நீருமில்லை வாயுமில்லே தேயுமில்லை நானுமில்லை நீயுமில்லை நாளுமில்லை கோளுமில்லை பானுமில்லை மீனுமில்லை !

என்று அடுக்கிக் கொண்டே வருகிறார்,

இப்படி எது எது இறை என்று கருதப்படுகிறதோ அதையெல்லாம் இல்லையென்று மறுக்கின்ற நாஸ்திகன்தான் உண்மையான ஆஸ்திகன். பிறகு எதுதான் இறைவன்? (எதுதான்? யார்தான்? மொழிச்சிக்கல் வந்துவிட்டதல்லவா, இறைவன்' -மறுபடியும் மொழிச்சிக்கல்) ஏகன் என்றால் கூட ஆண் என்றாகிவிடும். ஆணுமில்லை என்று சொல்லிவிட்டு ஏகன் என்றால் தவறல்லவா? எனவே மிக மிக அற்புதமாக ஏகம் என்கிறார் பாவலர்

'ஏகம் என்ற கத்த நிலை நத்தேமோ'

  • மான்மிய மஞ்சரி’ என்று பெயர் வைத்தாலும் சமய நாயகர்களின் மான்மியங்களில் வழக்கமாகக் கூறப்படும் அதியற்புதங்களைப் பாடாமல் அறிவியல் பார்வையில், உலகியல் நெறியில் நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுத்துப்பாடுவது பாவலரின் பாராட்டத்தக்க பண்பு. இத்தகைய, நிகழ்ச்சிகள் தாமே பெருமானாரின் அற்புதங்கள்.ix