________________
10 "வறுமையிலே வாடிமிக நொந்து கெட்டபோதும் மானிடரே கையேந்தி இரந்திடல் செய்யாதீர் சிறுமையது மட்டுமன்று காலமெலாம் அந்தச் சீரழிவி லிருந்து நீர் விடுபடவே மாட்டீர் வெறுத்திடுவார் மாந்தரும்மை ஆதலினால் நீவீர் மிகச்சிறிய அளவிலேனும் தொழிற்செய்ய என்று எடுத்துக் காட்டுகிறார்கள். முயல்வீர்" வெறும் சடங்குகளினால் மாத்திரம் ஒருவன் முஸ்லி மாகிவிட முடியாது. பிற மனிதர்களிடமும் பிற உயிர் களிடமும் எவன் அன்புடனும், கருணையுடனும், நியாய உணர்ச்சியுடனும் பழகுகிறானோ அவன்தான் உண்மை யான முஸ்லிம் என்று பற்பல உதாரணங்களைக் கொண்டு நாயகமவர்கள் எடுத்துக்காட்டியிருக் கிறார்கள். இந்த அன்புக்கும் கருணைக்கும் நியாய உணர்ச்சிக்கும் முஸ்லிம், முஸ்லிமல்லாதார் என்ற வேறுபாடே இல்லை. ஏக இறைவனுடைய எல்லாப் படைப்புக்களுக்குமே இந்தப் பண்புகளைப்பற்றிக் கேட்க, கோர உரிமையுண்டு. எந்த ஒரு மனிதன் தன் அயலா னிடத்தில் நியாயத்துடனும் நேர்மையுடனும் நட் புடனும் நடந்து கொள்ளவில்லையோ அவன் நல்லவ னாகவோ முஸ்லிமாகவோ இருக்கமுடியாது என்று நாயகமவர்கள் பகர்ந்திருக்கிறார்கள். இதனைத் தான் கவிஞரவர்கள், “மானிடரில் நல்லவர்கள் யாரென்றே யோர்நாள் வள்ளலேநும் மிடத்தினிலே சகாபாக்கள் கேட்க தானிருக்கும் வீட்டருகே வாழ்ந்திருக்கும் மாந்தர் தக்கவரென் றுரைக்கும்படி வாழ்பவரே என்றீர். கடமை என்று நாயகமவர்களைப் பற்றிப் பாடுகிறார்கள். நாணயத்துடனும் கண்ணியத்துடனும் யுணர்வுடனும் செய்யப்படும் எந்தத் தொழிலும் சிறப் புடையதேயாம். செருப்புத் தைப்போனும், தோட்டி யும், முடி திருத்துபவனும், தாங்கள் செய்யும் தொழிலி னால் வேறு எவர்க்கும் எந்த விதத்திலும் தாழ்ந்தவராக மாட்டார். அவர்களுடைய தொழில் சமுதாயத்துக்கு. இன்றியமையாதது. இதை உணர்த்தும் வகையான்,