இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
81 எதிரிகளின் மத்தியிலும் தம்முடைய கொள்கை இன்னதென இயம்புவதில் சிறிதேனும் அச்சம் அதிர்ச்சியிவை யில்லாமல் சிங்கம்போல் நின்றே அவர் மறுப்புச் சொல்வதற்கு வகையேது மின்றி கேட்போர்க்குப் புரியும் புதிரேதும் இல்லாமல் படிதனது கருத்துக்களை மதிநிறைந்த நாயகமே நயம்படவே கூறும் ஆண்டவனின் தூதே மாட்சிமிகும் முஹம்மதரே வாழியரோ வாழி.