இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
83 கொள்ளையிட்ட கூட்டத்தார் திருந்திநடந் திட்டார் கொலைசெய்ய அஞ்சாதார் அறஞ்செய்ய லானார் கள்ளரென வாழ்ந்தவர்கள் கல்விப்பணி கண்டார் கன்னிவேட்டைக் காரரெலாம் பெண்மதிக்க வாழ்ந்தார் கள்ளுண்டு சூதாடிக் களித்தவர்க ளெல்லாம் கருணைமிகும் நாயகமே கே வெள்கித்தன் நிலைவிட்டு உமைச்சேர்ந்த பின்பு நல்லவராய் ஆனார் வேதநபி முஹம்மதரே வாழியரோ வாழி.