இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
85 பெண்கள்நட மாடஅஞ்சிப் பயந்திருந்த நாட்டில் பேரழகு படைத்த இளம் பெண்ணொருத்தி தனியாய் வண்ணமுற அலங்கரித்துப் பொன்நகைகள் பூண்டு வழிநடையாய் இரவுதனில் சென்றிட்ட போதும் கண்ணியமாய் அவட்குதவி செய்தலன்றிக் கற்பைக் கவருகின்ற காமுகரோ திருடர்களோ யில்லாப் புண்ணியநன் நாடமைத்த ஆண்டவனின் தூதே போதமிகும் முஹம்மதரே வாழியரோ வாழி