இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
94 தனக்காக இறைவனிடம் வாழ்நாளில் எதையும் தருகவென இரந்திடுதல்+ செய்யாத செம்மல் தனைச்சூழ்ந்தோ ராயிரம்பேர் தன்மனதில் அச்சமேதும் கொல்லவந்த போதும் கொண்டறியா வீரர் புனைந்தொன்றைக் கூறுகின்ற வழக்கமிலா மேதை புல்லுக்கும் தீங்கெண்ணா நன்மனத்து வள்ளல் அனைத்துலக மாந்தருமே ஒன்றுபட மார்க்கம் அளித்திட்ட முஹம்மதரே வாழியரோ வாழி.