இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
98 பிறக்கும்முன் தந்தையரைத் தானிழந்து புவியில் பிறந்தசில ஆண்டிற்குள் தாயாரை யிழந்து சிறப்பான கல்வியின்றி மாடாடு மேய்த்துச் சுற்றத்தார் ஆதரவில் அனாதையென வளர்ந்து முறைப்படிக்குத் தொழில்செய்து திருமணம்மு டித்து மூவிரண்டு மகவுபெற்று ஞானவழி சென்று பெறர்க்கரிய நபிப்பட்டம் பெற்றிட்ட யிறுதிப் பெருநபியே முஹம்மதரே வாழியரோ வாழி.