இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
100 ஊர்நடுவே பழுமரத்தை நட்டுவைத்தாற் போலே உலகினிடை தீன் தருவை நீர்நட்டு வைத்தீர் ஊர்நடுவே நீர்நிலையம் உண்டாக்கல் போலே உத்தமரே உலகினுக்கு நல்லிஸ்லாம் தந்தீர் ஊர்நாடிச் செல்லுகின்ற மரக்கலம்தன் திசையை உணர்ந்துசெலக் கலங்கரைவி ளக்கமைத்தாற் போலே ஊர்நாடோ டுலகமெலாம் சீர்திருந்த இஸ்லாம் உவந்தளித்த முஹம்மதரே வாழியரோ வாழி.